No icon

மறைக்கல்வியுரை

ஆன்ம இருளை வெற்றி கொண்டு வாழுங்கள்

வெறுமை, வருத்தம் என்னும் ஆன்ம இருள்களை வெற்றிகொள்வதன் வழியாக இறைவன் நம் ஆன்ம வளர்ச்சிக்கு என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும்  புதன் பொதுமறைக்கல்வியுரையில் சீராக் 2- 1,2,4,5 இறைவசனங்கள் அடிப்படையில் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

புதன் பொதுமறைக்கல்வியுரை

ஆன்மீக ஆசிரியர்கள் கூறும் வெறுமை, சோதனை என்பது நமது ஆழமான துயர நிகழ்வுகளின் அனுபவங்கள், அமைதியற்ற நிலை, ஆறுதல் தரும் நம்பிக்கையிலிருந்தும் கடவுளிடமிருந்தும் தூரமாக இருத்தல் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய ஆன்ம இருள்களின் வழியாக கடவுள் நமது ஆன்ம வளர்ச்சிக்குச் சொல்ல விரும்புவது என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். வெறுமை, சோதனை என்பது  சில நேரங்களில் நமது பாவத்தையும், கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ள ஒரு அழைப்பாகவும் இருக்கின்றது. புனித தாமஸ் அக்குவினாஸ் கூறுவது போல நமது உடல் வலியைப் போன்று  வெறுமையும் நம் ஆன்மாவிற்கு வலியை உருவாக்கி ஆன்ம நலனிற்கு எச்சரிக்கை விடுக்கின்றது. சில நேரங்களில் செபம் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கை நெறிமுறைகளில் தொய்வு ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் சோதனையாகவும் மாறுகின்றது. இச்சோதனைக்கு அடிபணியாமல் விடாமுயற்சியுடன் இச்சோதனை வழியாக நம் வாழ்வின் இறைத்திருவுளத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, நம்பிக்கை மற்றும் அன்பில் கடவுளுடன் ஆழமாக ஒன்றிணைய அவர் நமக்கு வழிகாட்டுவார்.

இவ்வாறு, தன் புதன் பொதுமறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இளையோர், வயதில் மூத்தோர், புதிதாக திருமணமானவர்கள், ஆகியோரை வாழ்த்தி, அக்டோபர் மாத இறுதி வாரமாகிய இந்நாட்களில் செபமாலை செபிப்பதை சிறப்பாக  வலியுறுத்தினார்எளிமையான, பரிந்துரையான, மரியன்னை பக்திமுயற்சியான இச்செபமாலை நம்பிக்கை மற்றும் தாராளமனம் கொண்டு கடவுளைப் பின்பற்ற நமக்கு வழிகாட்டும் என்று கூறி தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்

Comment