Namvazhvu
தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை வழங்கிய ஆந்திரப்பிரதேசம்
Wednesday, 19 Jun 2019 07:01 am

Namvazhvu

ஆந்திரப்பிரதேசத்தில் தலித் கிறிஸ்தவர் களின் சார்பாக அந்த மாநிலச் சட்டப்பேரவையில் பிப்ரவரி 4 அன்று நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் குறித்து இந்திய ஆயர் பேரவை தனது பாராட்டுகளை வெளியிட்டுள்ளது.
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
வழங்கப்படும் சலுகைகள், தலித் கிறிஸ்தவர்களுக் கும் வழங்கப்படும் என அறிக்கை வெளியிட்ட ஆந்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அலுவலகத்தின் செயலரான அருட்பணி. தேவ சகாயராஜ் அவர்கள் தனது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளார்கள். இந்த தீர்மானம் தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமையை முழுமையாக வழங்கிவிட வில்லை. இவர்கள் இன்னமும் மிக நீண்டதொரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சீக்கிய, புத்த மதங்களைச் சார்ந்த தலித் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவர்களுக்கும் கிடைக்கும் என்ற அறிவிப்பினை எல்லாக் கிறிஸ்தவ அமைப்புகளும் வரவேற்றுள்ளன. பீகார், தெலுங்கானா, உத்திரப்பிரதேசம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே தலித் கிறிஸ்தவர்களுக்கு மாநில அளவில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1950 ஆண்டிலிருந்து இந்து மதத்தைச் சார்ந்த தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சலுகைகள், 1956 வது ஆண்டு ஒரு சட்டத்திருத்தத்தின் வழியாக சீக்கியர்களுக்கும், 1990-வது ஆண்டு ஒரு சட்டத்திருத்தத்தின் வழியாகப் புத்த மதத்தினருக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.