Namvazhvu
ஜூன் 28  புனித ஐரேனியஸ்
Wednesday, 29 Jun 2022 07:05 am
Namvazhvu

Namvazhvu

புனித ஐரேனியஸ் இரண்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிறந்தார். கத்தோலிக்க இறையியலார்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். உரோமைப் பேரரசரான மால்குஸ் அவுரேலியுஸ் கிறிஸ்தவர்களை கொலை செய்த காலத்தில் லுக்குனம் பகுதியில் குருவாக இறையாட்சி பணியை சிறந்த முறையில் செய்தார். மறைக்கலகத்தின் போது, கிறிஸ்தவ நம்பிக்கையை புறக்கணிக்காத அருள்பணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட குருக்களின் நிலையை உரோமை சென்று திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார். லுக்குனம் பகுதிக்கு திரும்பியதும் ஆயரானார். 24 ஆண்டுகள் அமைதியின் வழியில் மகிழ்வுடன் ஆயராக இறைபணி செய்தார். சிந்தனைத்துவக் கருத்துகள், தப்பறைகள் ஆகியவற்றிற்கு எதிராக நூல்கள் எழுதினார். புதிய ஏற்பாட்டின் அதிகாரப்பூர்வ பதிப்புகள் உருவாக வழி செய்த ஐரேனியஸ், மறைசாட்சியாக இறந்தார்.