Namvazhvu
திருநாள் : ஜூன்  29  புனித பேதுரு மற்றும் புனித பவுல்
Wednesday, 29 Jun 2022 07:27 am
Namvazhvu

Namvazhvu

திரு அவையின் இரண்டு தூண்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல். இயேசு கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். பேதுரு பெத்சாய்தா நகரில் பிறந்து கப்பர்நகூமில் குடியேறிய யோனாவின் மகன். பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியை பெற்று, போதித்த முதல் போதனையில் 3000 பேர் திருமுழுக்குப் பெற்றனர். பாலஸ்தீனாவில் பணியாற்றினார். முடவனுக்கு இயேசுவின் பெயரால் குணம் கொடுத்தார். 67 இல் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். புனித பவுல் தர்சு நகரில் பிறந்தார். யூத ரபி கமாலியேல் என்பவரிடத்தில் திருச்சட்டத்தில் பயிற்சி பெற்றார். கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார். இறைவனின் அழைப்பு பெற்று, சவுல் பவுலாக மாறி நற்செய்தி பணிக்காக தன்னை அர்ப்பணித்தார். கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத இடங்களில் நற்செய்தி அறிவித்தார். தன் சொல்லாலும், செயலாலும் கிறிஸ்துவின் உண்மையான ஊழியனாக வாழ்ந்த பவுல், 67 ஆம் ஆண்டு நீரோ மன்னனின் காலத்தில் தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.