Namvazhvu
ஜூலை 03 புனித தோமா
Saturday, 02 Jul 2022 05:25 am
Namvazhvu

Namvazhvu

புனித தோமையார் கலிலேயாவில் ஏழை மீனவப் பெற்றோருக்கு பிறந்தார். 12 திருத்தூதர்களுள் ஒருவர். கிறிஸ்துவின்மீது பற்றுகொண்டு வாழ்ந்தார். உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்றுகூறி, கிறிஸ்துவின் வார்த்தையை அறிவிக்க இந்தியா வந்தார். தச்சு தொழில் செய்பவராக தட்சசீலம் என்ற இடத்தில் போதனையை ஆரம்பித்தார். அரசர் அரண்மனை கட்டித்தருமாறு தோமாவிடம் பணம் கொடுத்தபோது, அரசனிடமிருந்து பெற்ற பணத்தை ஏழைகளுக்கு கொடுத்தார். இதனால் அரசன் தோமாவை சிறையில் அடைத்தான். அரசனின் சகோதரன் காத் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து, தனது அண்ணன் கனவில் தோன்றி, விண்ணகத்தில் தோமா கட்டியுள்ள அரண்மனையில் நான் நலமோடு இருக்கிறேன். அவரை ஒன்றும் செய்துவிடாதே என்றார். அரசன் மனம் மாறினான். 52 ஆம் ஆண்டு கேரளா வந்தார். அரசன் மாஸ்டாய் என்பவரின் மனைவி, மக்கள், ஏராளமானோர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் தோமாவை சென்னைப் பெரியமலை பகுதியில் ஈட்டியால் குத்தி, கொலை செய்தார்.