Namvazhvu
நவம்பர் 14 புனித லாரன்ஸ் ஓ டூல்
Thursday, 10 Nov 2022 13:03 pm
Namvazhvu

Namvazhvu

அயர்லாந்தில் முர்செர்டாக் என்பவரின் 4வது மகனாக 1128 இல் பிறந்தார். அரண்மனையில் பணிபுரிந்த லாரன்ஸின் தந்தை, மன்னருக்கு கீழ்ப்படியவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்படவிருந்த போது, முர்செர்டாக் தனக்கு பதில் தன் மகன் லாரன்ஸை கைதியாக சிறைக்கு அனுப்பினார். தனது 10 வயதில் சிறை சென்ற லாரன்ஸ் பல துன்பங்களுக்கு ஆளானார். விடுதலை செய்யப்பட்ட பின்பு க்லந்தாலோக் துறவு மடத்தின் தலைவர் துன்லாங்கோடு துறவு மடத்திற்கு சென்றார். அவரது இறப்பிற்கு பின் துறவு மடத் தலைவரானார். தனது 32 ஆம் வயதில் டப்ளின் பேராயரானார். புனித வாழ்வு வாழ்ந்து 1180, நவம்பர் 14 இல் உயிரிழந்தார். 1225, டிசம்பர் 11 இல் புனிதர் பட்டம் பெற்றார்.