Namvazhvu
பிப்ரவரி - 21 புனித பீட்டர் தமியான்
Friday, 17 Feb 2023 12:34 pm
Namvazhvu

Namvazhvu

புனித பீட்டர் தமியான் 1007 ஆம் ஆண்டு பிறந்தார். அன்பையும், அரவணைப்பும் அன்னை மரியாவிடமிருந்து பெற்றார். பக்தியும், அறிவும், நற்குணமும் கொண்ட தமியான் ஏழைகளை அன்பு செய்து, செபவாழ்வில் கவனம் செலுத்திய சிறந்த பேராசிரியர். உலக நாட்டங்களைத் துறந்து, குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்து, துறவியானார். இறைவனின் துணை நாடி, விவிலியம் நன்கு கற்று, வகுப்புகள் வழியாக பறைசாற்றினார். ஒப்புரவு அருள்சாதன வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இறைவா! நீரே என் வாழ்வு; நீரே என் கதி என்று இறைவனிடம் சரணடைந்தார். இறைவனின் திருவுளத்திற்குத் தன்னை முழுமையாக கையளித்தார். 1043 இல், சபையின் தலைவரானார். சபையின் விதிமுறைகளை ஒழுங்குப்படுத்தினார். 1057 ஆம் ஆண்டு, கர்தினாலானார். “எல்லாரும் தங்கள் முன்மாதிரிகையால் மற்றவர்கள் முன் ஒளிர வேண்டும்என்று கூறி, 1072 ஆம் ஆண்டு, பிப்ரவரி 21 ஆம் நாள் இறந்தார்.