No icon

கேரள அரசின் கல்விக் கொள்கைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு - 21.03.2021

கேரள அரசின் கல்விக் கொள்கைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

கேரள அரசு கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி  கொண்டு வந்த கல்விச் சீர்திருத்தச் சட்டம் தமது கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் கத்தோலிக்கத் திருஅவையின் அரசியல் சாசன உரிமைக்கு எதிராக உள்ளது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இச்சட்டத்தின்படி, சுயநிதிக் கல்லூரிகள் அனைத்தும் பேராசிரியர்களையும் பணியாளர்களையும் நியமிக்கும்போது அரசு வகுத்துள்ள வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது. அவர்களுடைய சம்பளம், பணியிடமாற்றம், விடுமுறைகள், பதவி உயர்வு மற்றும் ஏனையவற்றில் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கு உள்ள உரிமையை இச்சட்டம் பறித்துள்ளது. ஆகையால் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பேராயர் ஆன்ரூஸ் தாழாத் அவர்களின் தலைமையிலான கிறிஸ்தவத் தலைவர்களும் கல்வி நிறுவனங்களும் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன. திரும்பப்பெறாத பட்சத்தில் அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளன.

Comment