No icon

கொரோனா! நிச்சயம் மரணம் உன்னைத் தழுவும்

கொரோனா! நிச்சயம் மரணம் உன்னைத் தழுவும்

திரு. சு. சவரிமுத்து, ஆசிரியர், கடலூர்

இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்

நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும்

நீர் அஞ்சமாட்டீர் என்றுரைக்கும் புனித கிறித்துவ நூலுக்கு

செவிமடுத்து முகக்கவசம் அணிந்து நம்மை காப்போம்

இயற்கையே உன் சீற்றத்திற்கு மறுபெயர் கொரோனாவா

இரக்கம் இல்லாமல் எங்களைக் கொல்வது நியாயம்தானா

இரண்டாம் அலையில் தாண்டவமாடும் மோசமான கொரோனாவே

இலட்சம் உயிர்களை நீ பலி வாங்குவது நியாயம்தானா

கோரைப்பிடியில் சிக்க வைக்கும் கொரோனாவே

சுவாசமின்றி எங்களைப் பழிவாங்குவது நியாயம்தானா

மூலைமுடுக்கெல்லாம் மரண ஓலங்கள் கேட்குதே கொரோனா

மலைப்போல் பிணக்குவியல் குவியுதே இது நியாயம்தானா

இரண்டு வருடங்களாக எங்களை திண்று ருசிக்கிறாயே கொரோனாவே

இளைஞர்களையும் நீ விட்டுவைக்கவில்லை நியாயம்தானா

இந்தியாவையே நாசம் செய்யும் நாசக்கார கொரோனாவே

யாரையும் நீ விட்டு வைக்கவில்லை இது நியாயம்தானா

இரண்டு தலைமுறை கல்வியே எங்களுக்கு பறிப்போயிற்று

வீட்டிலே அடைப்பட்டு பிள்ளைகள் எதிர்காலம் கேள்விக்குறியாயிற்று

நாட்டில் எங்களுக்கு சவாலான நேரம் உருவாயிற்று

பணக்காரனும் பயந்து ஓடுகிறான் நிலமை மோசமாயிற்று

பல சதுரடியில் வீடுகட்டி நிம்மதியாய் வாழ்கிறோம்

சாகும்போது ஆறடி நிலமில்லாமல் நாங்கள் தவிக்கிறோம்

சாலையோர மருத்துவமனையில் மரண ஓலங்கள் கேட்கிறோம்

பிணத்தின் மேல் நடந்து சென்று உடன் பிறப்பைத் தேடுகிறோம்

ஒவ்வொரு நாட்டிலும் உருமாறி எங்களை அழிக்கிறாய்

மருத்துவமனையில் சிகிச்சைபெற இடமில்லாமல் ஆக்கிவிட்டாய்

மருந்துக்கும் ஆக்சிஜனுக்கும் எங்களை அலைய வைக்கிறாய்

கள்ளச் சந்தையில் மருந்து வாங்க வரிசையில் நிற்கவைக்கிறாய்

கொரோனாவின் முதலலையில் உணவிற்கு நாம் அலைந்தோம்

இரண்டாம் அலையில் ஆக்சிஜனுக்கு நாம் அலைகிறோம்

மூன்றாம் அலை வேண்டாமென பயந்து வாழ்கிறோம்

கொரோனாவை விரட்டுவோம் முகக்கவசம் அணிவோம்

மனிதன் வலுவிழந்து மரணமடைய வேண்டும் அது நியதி

தொற்று நோயால் மரணம் நாடினால் அது அநீதி

இத்தனை உயிர்களைப் பலிவாங்கி எத்தனை நாள் நீ இருப்பாய்

உன்னையும் மரணம் நிச்சயம் தழுவும் நீயும் இருக்கமாட்டாய்

Comment