No icon

குடந்தை ஞானி

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சிறுபான்மையினர் பாராட்டு

இந்தியாவில் இருக்கும் பூர்வீக இந்துக்களே இந்தியாவின் குடிமக்கள், மற்றவர்களெல்லாம் குடியேறிகளாகவே கருதப்படுவார்கள் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA) கொண்டு வந்தது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களும் இந்தியக் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்று சொல்லக்கூடிய, குடியுரிமை சட்டம் 1955 ஆளும் பாரதிய ஜனதா கட்சி மாற்றப் போவதாக அறிவித்தது. இந்தக் குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA) எதிர்த்து இந்திய சிறுபான்மையினர் குறிப்பாக, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2019 ஆம் ஆண்டு, உத்தரபிரதேசத்தில் நாடு தழுவிய போராட்டம் கடைபிடிக்கப்பட்டது. இவ்வாறு அமைதி வழியில் போராட்டம் நடத்தினாலும், 800க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2.24 மில்லியன் ரூபாய் அபராதம் உத்தரபிரதேச அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது.

இந்த செயலை எதிர்த்து சிறுபான்மையினர் பதிவு செய்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதி, போராட்டக்காரர்கள் என்றும், பொது சொத்தை சேதப்படுத்தியவர்கள் என்றும், உத்தரபிரதேச அரசாங்கம் வசூலித்த தொகையை அவர்களிடமே திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக்கேட்டு மகிழ்ந்த சிறுபான்மை மக்கள் இத்தீர்ப்பை வரவேற்று பாராட்டியுள்ளனர்.

Comment