No icon

சிலுவையின் முன் திரிசூலத்தை நட்ட மதத் தீவிரவாதிகள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலி மேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு குன்றில் பல ஆண்டுகளாடீநு நிறுவப்பட்டிருந்த ஒரு சிலுவையின் முன், மதத் தீவிரவாதிகள் சிலர், திரிசூலம் ஒன்றை நாட்டியதற்கு, இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் ஜார்ஜ் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்,
1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அச் சிலுவை, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள, அந்தராஷ்ட் ரிய இந்து பரிஷத் என்ற அமைப்பு, திரிசூலத்தை அச்சிலுவைக்கு முன் நட்டுவைத்து, தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
1963 ஆம் ஆண்டு பாஞ்சாலி மேடு குன்றை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீடிந, அரசு, இரு குடும்பங்களிடமிருந்து கைப்பற்று முன்னரே, அதாவது, 1954 ஆம் ஆண்டிலேயே, அக்குன்றின் மேல் சிலுவை நாட்டப்பட்டது என்று அப்பகுதியில் பணிபுரியும், புனித மரியா பங்குத்தளத்தின் அருள்பணியாளர் ஜேம்ஸ் கூறினார்.
மேலும், இக்குன்றில் நடப்பட்டுள்ள சிலுவையை மையமாக்கி, ஒவ்வோர் ஆண்டும், கத்தோலிக்கர்கள் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் அருள்பணி ஜேம்ஸ் எடுத்துரைத்தார்.
கேரளாவில், மதங்களுக்கிடையே பகைமை உணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இத்தகைய முயற்சிகளை இந்துத் தீவிரவாதிகள் மேற் கொள்கின்றனர் என்று சஜன் ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் அளித்த புகார் மனுவை ஏற்று, அரசு அதிகாரிகள், திரிசூலத்தை அகற்றி யதைத் தொடர்ந்து, இணக்க வாடிநவுக்கு உதவும் நோக்கத்தில், கிறிஸ்தவர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த சிலுவையையும் அகற்றியுள் ளனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

Comment