No icon

ஜூலை 04 

போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்

புனித ­லிசபெத் போர்ச்சுக்கல் நாட்டில் 1271 ஆம் ஆண்டு பிறந்தார். எலி­சபெத் அரண்மனையில் வாழ்ந்தாலும், ஏழ்மையில் ஏழைகளின் தாயாக வாழ்ந்தார். ஏழைகளுக்கு உதவி செய்வதில் பேரின்பம் அடைந்தார். அறநெறி வாழ்விலும், ஒழுக்கத்திலும், பக்தியிலும் இறைவனுக்கு உகந்தவரானார். 12 ஆம் வயதில் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசர் டென்னிஸ் என்பவரை திருமணம் செய்தார். அரண்மனை வாசிகளை அன்பு செய்தார். கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது, இறைவேண்டல் வழி கணவரை மனம் மாற்றினார். 2 குழந்தைகளுக்கு தாயானார். ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் அனைவருக்கும் உதவினார். கணவர் இறந்தபின் பிரான்சிஸ் அசிசியார் மூன்றாம் சபையில் துறவு மேற்கொண்டு ஏழைகள், நோயுற்றோர் மத்தியில் இறைபணி செய்தார். மக்கள் மனதில் இறையன்பு, அமைதி ஏற்படுத்த அயராது உழைத்து, 1336, ஜூலை 4 ஆம் நாள் இறந்தார்.

Comment