No icon

இனி நடக்க வேண்டியது என்ன?

இது என்ன தலைப்பு? ஒன்றும் புரியவில்லையே?

கொரோனா எனும் தொற்று நம்மை நிகழ்கால நிஜங்களைப் பார்க்க விடாது தடுத்து விட்டதோ? அல்லது எப்போதும் போல் கண்டும் காணாது இருக்கும் மனோ நிலைக்கு தள்ளி விட்டதோ?


என்ன நடந்து கொண் டிருக்கிறது? இக்கால நடப்பு பற்றி நாம் கவலை கொள்ளு முன் நம் கவனத்தை அதன் பால் திருப்பு முன் என்ன வெல்லாமோ நடந்து விட் டனவே! நடந்து கொண்டிருக்கின்றனவே! என்னவெல் லாம் நடந்தாலும் எல்லாம் நன்றாகவே நடந்ததாகவே கொண்டு, அமைதி காக்கப் போகின்றோமா?


“நாம் மிகப்பெரிய ஆபத்தான காலத்தை எதிர் நோக்கியிருக்கிறோம். பாசிச சக்திகள் நாளும் வலுப்பெற்று வருவதைப் பார்க்கிறோம். புதிய தீர்வுகளைக் காணும் வகையில், நம் தேடல்களும் ஆய்வுகளும் அமைதல் வேண்டும். இத்தீர்வுகளுக்கானப் போராட்டம் எளிதாக இருக்கப்போவ தில்லை; முழுமையான வளர்ச்சிக்கான வழி, நிலவும் முதலாளித்துவம், சனநாயகத்தை வலுப்படுத்துதல், பன்முகக் கலாச்சாரத்தை சமத்துவ அடிப்படையில் கட்டமைத்தல் என்பனவெல்லாம் இந்நாடு எதிர்கொள்ள விருக்கும் சவால்கள் என்பது பற்றி எங்காவது இப்போது பேசப்படுகிறதா? இன்றைய பாசிச சக்திகள் இந்நாட்டின் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகள் என்ன என்பது பற்றிய யோசனையில் கூட இல்லை”.


இந்நிலையில் "வாழ்வின் ஆதாரங்களை இழந்து நிற்கும் மக்கள் செல்லரித்துப் போன பழமைவாதங்களில், பழமைவாதத்தை கட்டியப் பிற்போக்கான நிறுவனங்களை அடையாள அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றன. இப்போக்கில் எழும் மிக முக்கிய ஆபத்து என்னவெனில் பாசிஸ்டுகள் முன்னெடுக்கும் தேசியத்தால் (சூயவiடியேடளைஅ) ஈர்க்கப்படுதல்தான்" (சந்தீப் பென்ட்சே - Fascism & Communalism P16) இந்தியாவில் வளர்ந்துவரும் பாசிச மற்றும் வகுப்புவாதம் பற்றிய ஆய்வின் இறுதியில் மேற்கண்ட ஆசிரியர் இவ்வாறு எச்சரிக்கிறார்.


வளர்ச்சி, பன்முகத்தன்மை, சனநாயகம் என்பன உயிர்த் தெடுக்கப்பட வேண்டிய கட்டாயச் சூழலில், பழமையைப் போற்றும் நிறுவனங்களிலும், கட்சி அமைப்புகளிலும் சாதாரண மக்கள்கூட ஈர்க்கப்படுதல் இந்நாட்டிற்குத் தரும் செய்தி என்ன?


“புது தில்லியிலிருந்து ஆள்வோர் அரசியல் சாசனத்தை நம்பாதவர்கள். ஒருநாள் வரும். அன்று இவ்வாட்சியாளர்கள் இந்திய அரசியல் சட்டத்தை கங்கையிலோ, யமுனாவிலோ தூக்கி எறிவார்கள். இதற்கான அனைத்து முகாந்திரங்களும் உறுதியாக உள்ளன. பாசிஸ்டுகள் தாம் விரும்பிய, எதனையும் செய்யும் ஆற்றலுடையவர்கள். பருக் அப்துல்லா, இந்து 25.08.2020.


காஷ்மீரத்தை இந்தியாவோடு இணைக்க தரப்பட்ட 370ஆம் பிரிவு அபகரிக்கப்பட்டது. தனித்த மாநிலங்கள் தம் தனித்தன்மைகளை இழக்கும் வகையில் அவமானப்படுத்தப்படுகின்றன. மாநிலத்தின் ஊரறிந்த தலைவர்கள், சிறையில் வைக்கப்படுகின்றனர். காஷ்மீரத்துக் குடிமக்கள் குடிகளாகின்றனர் (Subjects) சேக் அப்துல்லாவின் மகன், முன்னாள் காஷ்மீர் முதல்வர், இன்றைய காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். அவர் சொல்கிறார். “வீட்டுச் சிறையில் ஒரு கிரிமினல் போல் நடத்தப்பட்டேன். தன்னை ஒரு பயங்கரவாதியாகவும், திருடனைப் போலவும் நடத்தப் பட்டதாக அதே நாளிதழில் அதே நாள் செய்தியாக வெளி வந்துள்ளது.


முன்னுரையின் தொடக்கத்தில் சொல்லப்
பட்டவை சவால்கள் பன்மைச் சமூகமும், உறுதி பெறவேண்டிய அரசியல் சாசனமும் காக்க வேண்டிய சனநாயகமும், இன்றைய தேவைகள் இத்தேவைகளை நாம் நிறைவேற்ற வேண்டியது கட்டாயம். இவை இப்போது வெறும் கற்பனைகளாகிவிட்டன. வெறும் கனவுகளாகக் கூட இல்லையென்றாகிவிட்ட அவலம்.


இந்நாட்டிற்கு வேண்டியன யாவை, வேண்டாதன யாவை என்ற விவாதங்கள் இனி இல்லை; விவாதிக்கும் மனிதர்களும் இல்லை. விவாதிப்பதற்கான தளங்களும் இல்லை. நிறுவனங்கள் செயலற்று போயின. அல்லது அவற்றின் செயற்பாடுகள் மறுக்கப்பட்டுள்ளன. பன்மையின் அனைத்துக் கூறுகளும் அசிங்கப் படுத்தப்பட்டுள்ளன. முரண்படுவோர் தேசத்தின் எதிரிகளாகி ஒடுக்கப்படுகின்றனர். எவ்வழியிலும் மக்களை மடமைக்குள் தள்ளி வரும் அரசுகள் நோய்த்தொற்று காலத்தின்போது, குடிமக்களை கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக்கி வரு கின்றன. நாளும் பட்டினியால் மடியும் இறப்போர் எண்ணிக்கையை விட, நாளை என்ன நடக்குமோ என்று ஏங்கி வாழ்வோரே அதிகம் என்பதே உண்மை. கொரோனா எனும் நோய்த்தொற்று ஏற்படுத்தும் கொடுமையைவிட கொரோனா எனும் தொற்றுக்கு பிந்தைய கால விளைவு இன்னும் கடுமையானதான இருக்கும் என்று சமூக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குடிமக்கள் கேட்க நாதியற்றுப்போன நிலையில் நம் நாட்டுத் தலைமைகள் எதைப் பற்றிப் பேசுகின்றன!


இன்று மக்களை வறியோராக்கி கையேந்தும் அளவுக்கு தள்ளிவிட்ட நிலையில் அவர்கள் இன்று பேசு பொருளாக இல்லை. இன்று பொருளாதாரச் சூழல் பேசு பொருள் என்று இருக்க வேண்டிய அவலமான சூழலில், இதனைத் திட்டமிட்டு மறுத்து, சமூக கலாச்சார பிரச்சினைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூக, கலாச்சார அளவில்  உருவாக்கும் பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வு காணப்பட்டு விட்டது போன்ற பொய்த் தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. எதார்த்தம் என்ன? இன்று பாசிச அரசை எதிர்ப்போர் குரல் மழுங்கிப் போய்விட்டது. யாரை குறிவைத்து இந்துப் பெரும்பான்மை வளர அரசு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறும் நிலையில் இருக்கிறது என்று உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன் அடித்தளமே, இராமர் கோவில்.


இராமர் கோவிலுக்கான கால் கோள்
இசுலாமிய மதச் சிறுவான்மையினரின் 400 ஆண்டு கால வரலாற்றையுடைய பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிப்புக்கு முன்னால் 1990-ல் இன்றும் உயிர் வாழ்கின்ற அன்றைய துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி அவர்கள் நடத்திய ரதயாத்திரையை மறந்திடக் கூடாது. இன்று இடப்பட்ட இராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டுதற்கு மிகப் பெரிய காரணியாக அமைந்தது. இந்த ரத யாத்திரையோ “1990 ஆம் ஆண்டு அத்வானி அவர்கள் முன்னெடுத்த ரத யாத்திரை இந்தியச் சமூகத்தையும், அரசின் போக்கையும் வெகுவாகப் பாதித்த ஒன்று. இந்த யாத்திரை இந்து ஒற்றுமை (Symbol) இந்து அமைப்பு, மற்றும் இந்து மேலாண்மையின் அடையாளம் (Supremacy) என்று வர்ணித்தார். அத்வானி இந்த யாத்திரை இந்திய முஸ்லீம்களுக்கான இடம் எது என்பதைக் காட்டுதற்கான ஒரு முயற்சி; இராமர் பிறந்த பூமியை 500 ஆண்டுகளுக்கு முன் அபகரித்து இராமருக்கான கோவிலை அழித்தவர்களுக்கு பாடம் புகட்டவே இந்த ரத யாத்திரை என்று வெளிப்படையாக அப்பட்டமாக சொன்னவர் அத்வானி.


அத்வானியின் இரத யாத்திரைக்குப் பின்னால், இரத்தக்கரை பிடித்த காயங்கள் உள.
இரத யாத்திரை பயணித்த இடமெல்லாம் நூற்றுக் கணக்கில் இசுலாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். 1925 இல் உருவான ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பின் அரசியல் முன்னணியான பாரதிய சனதாவின் நாடாளுமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. பாரதிய சனதா, பஜரங்தள், விசுவ இந்து பரிஷத் எனும் ஆர்.எஸ்.எஸ்சின் துணை அமைப்புகள் பகிரங்கமாக பகைப் பிரச்சாரங் களை முன்னெடுக்க துணை நின்றது ரத யாத்திரை. வரலாற்றுண்மைகள் மறைக்கப்பட்டு, திரிக்கப்பட வழிகண்டது யாத்திரை. இராம சென்ம பூமியை மீட்க இந்துக்கள் நடத்திய தியாகப் போரில் எண்ணிலடங்கா இந்துக்கள் கொல்லப்பட்டதாக பொய்யான வரலாற்றை உருவாக்கியது காலம். நாடெங்கும் உருவாக்கப்பட்ட கல்விக் கூடங்கள் மூலம் புனைவுகளும் பொய்க் கதைகளும் விதைக்கப்பட்ட காலம். இந்தியமயம், ஆன்மிகமயம், இந்துமயம் என்ற கோட்பாட்டை கல்விக் கோட்பாடாக்கி பாடப்போதனைகளைக் காவிமயமாக்க துவங்கிய காலம்.


இராமனுக்கு கோவில் இல்லையா? என்ற கேள்வியை சாதாரண இராம பக்தியுள்ள மனிதர் களிடம் நஞ்சைப் புகட்டிய இரத யாத்திரைக்குப் பின் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. பலப்பல திட்ட மிட்ட சிறிய பெரிய சதிச்செயல்கள் வகுப்புவாதக் கருத்தியலாய், வகுப்புவாதப் பதட்டங்களாய், வகுப்புவாதக் கலவரங்களாய் வளர்ந்து அல்லது வளர்த்தெடுக்கப்பட்டு வகுப்புவாத அரசியலின் வெற்றியாக வளர்ந்துவிட்ட மதவாத அரசியலின் உச்சமே இராமர் கோவிலுக்கான கால் கோள்.


இக்கால் கோள் இந்திய சமய சார்பற்ற இந்திய சனநாயகத்துக்கு தரும் செய்தி என்ன? இந்தியப் பிரதமர் பண்டிதர் நேரு இந்தியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது சொன்னதை இங்கு நினைவு கூரலாம். “இந்தியா எனும் ஒரு நாட்டின் இருப்பு (Survival) இந்திய நாடு ஏற்றுக் கொள்ளும் சமயச் சார்பின்மையில்தான் இருக்க முடியும். சமயச் சார்பின்மை இல்லா நாடு இந்தியாவாக இருக்காது”, என்ற கூற்றை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். மோடி தலைமையில் நடத்தப்பட்ட பூமி பூஜையில் சமயச் சார்பின்மையின் இடம் என்ன? பிரதமரின் இராம நம்பிக்கையில் நமக்கு முரணில்லை; ஆனால் இந்நம்பிக்கையை நியாயப்படுத்த சமய சார்பற்ற நாட்டில் ஒரு பூசாரிபோல் நடந்து கொண்ட முறைதான் கேலிக்குரியது. இவர் முதல்வராக இருந்த காலத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த இசுலாமியர் நிகழ்ச்சியொன்றில் அச்சமயத்தார் இவரை தலையில் தொப்பி அணிய கேட்டுக் கொண்டபோது, மறுத்த இவரது உறுதி, பூசையின்போது பூசாரியாக நடந்து கொண்ட முறைக்கு என்னபொருள்? மீண்டும் கட்டுரைத் தலைப்பை திருப்பிப் பார்ப்போம்!


காந்தியைக் கொன்றோம். வகுப்பு வாத நஞ்சை விளைத்தோம். ஆட்சியை மெல்ல மெல்ல கைப்பற்றினோம். அதுவும் இவர்கள் நம்பவே நம்பாத சனநாயகம் தரும் தேர்தல் வழியாகவே கைப்பற்றினோம். சனநாயகத்தை, சனநாயகம் தரும் குடிமக்களின் சமத்துவத்தை அரசு பேண வேண்டிய சமயச் சார்பின்மையை, சமய ரீதியான பாகுபாட்டை, குடிமக்களின் உரிமைகளைப் பேணுதல் எனும் அனைத்து இந்தியப் பண்புகளையும் (alternate vision) விற்றுத் தீர்த்தோம். இந்தியாவின் இப்பண்புகளுக்கு மாற்றுப்பண்பை (யடவநசயேவந ஏளைiடிn) மோடி உருவாக்கியிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பீத்திக் கொள்கின்றனர்?  இன்னொரு வேடிக்கை என்னவெனில், மோடி அரசியல் சாசனத்தைச் சிதைக்கும் எந்தக் கைங்கர்யத்தையும் செய்ய வில்லையாம். சமூக, நீதிக்கான இட ஒதுக்கீட்டைச் சிதைத்து உயர் குடியினர்க்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடும் அரசியல் விதிப்படியே நடந்ததாக சொல்லும் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்வது?


இன்று சனநாயகத்துக்கு, சமயச் சார் பின்மைக்கு எதிராக நடைபெறும் அனைத்து வகை தகிடுதத்தங்களுக்கு நியாயம் அளித்த நாள்தான்1992 டிசம்பர் 6.


மசூதியின் மூன்று கோபுரங்களும், பாரதிய சனதாவின் தலைவர்கள் கண் முன்னே இந்திய இராணுவத்தின் மேற்பார்வையில், கர சேவகர்களால் இடித்து தள்ளப்பட்டபோது, வி.பி.சிங் சொன்ன கூற்றை இங்கு நினைத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கலாம்.


“இடிக்கப்பட்டவை வெறும் கோபுரங்களல்ல. இந்தியாவின் மகத்துவத்தை (Majesty) நிலை நாட்டும் சமத்துவம், சனநாயகம் மற்றும் சமயச் சார்பின்மை எனும் மூன்று கோபுரங்களே! கரசேவகர்களின் இடிப்பைக் கண்டு மகிழ்ந்த கூட்டம் இன்றும் கூத்தாடுகிறது.


1949ன் ஒருநாள் இரவில், மசூதியின் ஒரு பக்கத்தில் மதவெறியாளர்களால் சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்ட சிலைகளை அகற்றும் துணிவு காங்கிரசுக்கு, அன்றே வரவில்லை;

இராமசென்ம பூமிக்காக வழக்கை நடத்திய உச்ச நீதிமன்றம், மசூதி இடிப்பை காட்டு மிராண்டித்தனமானது வர்ணித்து விட்டு,இராமர் சென்ம பூமி, இராமருக்கானது என்றுநம்பிக்கை வழி தீர்ப்பு சொல்லியது; இடித்தவர்களை வரலாறு என்ன செய்யுமோ? இதுவரை நடந்த தெல்லாம், நன்றாகவே நடந்துள்ளது! இனி என்னவெல்லாம் நடக்குமோ? இனி நடப்பது அனைத்தும் அவாளுக்கு சாதகமானதாகத்தான் அமையும்!

Comment