No icon

ஏன் இந்தக் கொடுமை?

சத்யா: அப்பாடா! பார்த்து எவ்வளவு நாளாச்சு!?
சுந்தர்: இந்த லாக் டவுன் எவ்வளவு பெரிய வேதனை? முதல்ல கொஞ்ச நாள் ஜாலியாத்தான் இருந்துச்சு. நாளாக ஆக... ஐயோ, பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு.
சத்யா: ‘எங்கேயும் போகாதீங்க.வீட்டிலேயே இருங்க’ன்னு நம்மள அடைச்சு வைக்கிறது நமக்கு ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? ஏனென்றால் அது நம்முடைய மனித இயல்புக்கு முற்றிலும் மாறானது. போக வேண்டும், வர வேண்டும் என்று தானே நாம் விரும்புகிறோம்? ‘இந்த இடத்தை விட்டு நீ எங்கேயும் நகர முடியாது’ என்றால், அதற்குப் பெயர் சிறை. இது மனித இயல்பு மட்டுமல்ல, மனிதர்களின் மூதாதையரான விலங்குகள், பறவைகள் அனைத்தின் இயல்பும் தான். 

சத்யா: அப்படின்னா காட்டுல இஷ்டம் போல சுற்றித் திரிகிற விலங்குகளை எல்லாம் பிடிச்சிட்டு வந்து, கூண்டுக்குள்ள அடைச்சு...
சுந்தர்: வருஷம் முழுக்க இல்ல; வாழ்நாள் முழுக்க லாக் டவுன்னு அதுங்களை எங்கேயும் போக விடாமல் பண்றது எவ்வளவு பெரிய அநியாயம்?
சத்யா: அநியாயம் தான். சந்தேகமே இல்லை. சரி, இந்த  கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இந்தக் கொடிய தொற்று நோய் உலகில் இத்தனை பேரைக் கொன்னு, உலகத்தையே லாக் டவுன் பண்ணி வச்சிருக்கே, இதற்கு அடிப்படை காரணம் என்ன?

அதற்குப் பிறகு வருவோம். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘யானை டாக்டர்’ என்ற புகழ்பெற்ற சிறுகதை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ‘அறம்’ என்ற தொகுப்பில் உள்ள கதை இது. இதில் உள்ள பன்னிரண்டு சிறுகதைகளும் நிஜ மனிதர்களை, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.
இந்தக் கதையில் வரும் "யானை டாக்டர்" நிஜ வாழ்விலும் அப்படித்தான் அழைக்கப்பட்டார். நூலின் இறுதியில் உள்ள ‘ஆளுமைகள்’எனும் பிற்சேர்க்கையில் இவரைப் பற்றிய குறிப்பு உள்ளது. யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தின்முக்கியமான காட்டியல் நிபுணர்களில் ஒருவர். யானைகளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். தமிழக வனத்துறையில் பணியாற்றிய விலங்கியல் மருத்துவர்.

தமிழகத்திலுள்ள எல்லா யானை காப்பகங்களுக்கும் அவர் மருத்துவக் கண்காணிப்பாளராக இருந்தவர். இவரது புகழ் பல நாடுகளிலும் பரவி இருந்தது. உலகப் புகழ்பெற்ற ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். காட்டியல் நிபுணர்களுக்கு வழங்கப் படும் மிக உயரிய விருதைப் பெற்றவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளுக்கு அறுவை சிகிச்சை செய்தவர். 300க்கு மேல் யானை பிரசவம் பார்த்தவர். நூற்றுக்கணக்கான யானைகளுக்கு சவப் பரிசோதனையும் இவர் செய்திருக்கிறார்.

யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள் தான் இன்று இந்திய வனவியல் துறையின் கையேடாக உள்ளன. இவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை பி.பி.சி தயாரித்து ஒளிபரப்பியது. அதன் பெயர் ‘டாக்டர் கே.’

இந்த ‘யானை டாக்டர்’ கதையில் கதை சொல்லியாக வரும் புதிய வனத்துறை அதிகாரி டாக்டரைச் சந்தித்து அவரோடு சேர்ந்து காட்டுக்குள் பயணம் செய்து, இருவரும் உரையாடுவதுதான் இந்தக் கதை. எவற்றைப் பற்றியெல்லாம் உரையாடுகிறார்கள்? காயப்பட்ட யானைகளுக்கு சிகிச்சை செய்வது,மிக ஆபத்தான விலங்குகள் என்று கருதப்படும் செந்நாய் களுக்கு அஞ்சாமல் அருகில் போய் சிகிச்சை செய்வது, காட்டுயானைகள், மற்ற காட்டு விலங்கு கள் சந்திக்கும் பிரச்சினைகள் போன்றவை பற்றி எல்லாம் இவர்கள் இருவரும் கதை முழுதும் உரையாடுகிறார்கள்.

கதை சொல்லி கூறுகிறார்: “ஒரு முறை முதுமலையில் ஒருயானைக்கு கால் வீங்கி, அதுகாட்டில் அலைவதாக தகவல்வந்த போது டாக்டர் கேவுடன் நானும் சென்றேன். ஒரு ஜீப்பில் காட்டுக்குள் நுழைந்தோம். நெடுந்தூரம் சென்று ஜீப்பை நிறுத்திவிட்டு, நானும் டாக்டரும் காட்டுக்குள் சரிவில் இறங்கிச் சென்றோம். ஓடை ஒன்றுக்கு அப்பால் 12 யானைகள் கூட்ட மாக நிற்பதைக் கண்டோம். மேலும் 6 யானைகள் மூங்கில் புதர்களுக்குள் மேய்ந்து கொண்டு நிற்பது தெரிந்தது. டாக்டர் தன் கருவிகளை எடுத்து பொருத்திக் கொண்டார். “நீங்க இங்க இருங்க. நான் போய் பார்க்கிறேன்” என்றார். ஒரு யானை டாக்டரை நோக்கித் திரும்பியது. அதன் காதுகள் வேகமாக அசைந்தன. தலையை வேகமாகக் குலுக்கிய படி டாக்டரை நோக்கி வந்தது. டாக்டர் அசையாமல் நின்றார். யானையும் அசையாமல் நின்றது.
டாக்டர் கே மேலும் முன்னே சென்றார். அப்போது அந்த யானைநெருங்கி வந்தது. ஆனால் தலையைக் குலுக்கவில்லை. டாக்டர் கே சீராக அதை நோக்கிச் சென்று அதன் முன் நின்றார். அது பேசாமல் நின்றது. என்ன நடந்ததென்றே தெரியவில்லை. யானை பின்வாங்கியது. பெரிய யானை திரும்பி டாக்டரை பார்த்து உறுமியது. பின் வாலைச் சுழற்றி வைத்துக் கொண்டது. பின்பு ஒவ்வொரு யானையாக மேலே ஏறி மலைச்சரிவில் மூங்கில் கூட்டங்களுக்குள் சென்றன. டாக்டர் கையை தூக்கி என்னிடம் வரும்படி சைகை காட்டினார். காயப்பட்ட யானை எங்களை நோக்கி வந்தது. அதன் பின்னங்கால் வீங்கி மற்ற கால்களை விட இருமடங்காக இருந்தது. அது நாலடி வந்ததும் சிறிய ஏர்கன் (யசை பரn) போன்ற ஒன்றில் மயக்க மாத்திரையை வைத்து டாக்டர் அதைச் சுட்டார்.
யானை உடல் அதிர்ந்து அப்படியே நின்றது. காதுகளை அசைப்பது நின்றது. சட்டென்று பக்கவாட் டில் விழுந்து புல் மேல் சாய்ந்தது.”

“டாக்டர் கே யானையின் அருகே அமர்ந்து சுறுசுறுப்பாக வேலையைத் தொடங்கினார். யானையின் காலில் பாதி பீர் பாட்டில் ஒன்று முழுமையாக உள்ளே ஏறியிருந்தது. அதைச் சுற்றி சீழ் கட்டி, சீழில் புழு வைத்து சிறு தேன்கூடு போல பொருக்கோடியிருந்தது. அந்த சீழ்பட்ட சதையை முழுக்க வெட்டி எடுத்தார்....” என்று யானைக்கு டாக்டர் செய்த சிகிச்சையை நுணுக்க மாக விவரிக்கிறார். 

சுந்தர்: பீர் பாட்டில் எப்படி யானை காலில் ஏறிச்சி? நல்ல கேள்வி. இதற்குப் பதிலாக இக்கதையின் முக்கிய மான பகுதி ஒன்றை அப் படியே சொல்ல வேண்டும்.
சத்யா: சொல்லுங்க.

கதையைச் சொல்லு கின்ற புதிய வனத்துறை அதிகாரியிடம் டாக்டர் கேன்னார்: “மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொரு  நாளும் முகத்தில் அறைந்தது போலப் பார்க்க வேண்டுமென் றால் நீங்கள் காட்டில் இருக்க வேண்டும். அனேகமாக இங்கேசுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள். பதவிகளில் இருப் பவர்கள். ஊரிலிருந்தே வறுத்த, பொரித்த உணவுகளுடனும் மதுக் குப்பிகளுடன் தான் வருவார்கள். வரும் வழி தோறும் குடித்துக் கொண்டும் தின்று கொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌன வெளியில் காரின் ஹாரனை அடித்துக் கிழிப்பார் கள். முடிந்தவரை கார் ஸ்டீரி யோவை அலறவிட்டுக் குதித்துநடனமாடுவார்கள். மலைச்சரிவு களை நோக்கி கெட்ட வார்த்தை களைக் கூவுவார்கள்.” 

“ஒவ்வொரு காட்டுயிரை யும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலையோரத்துக் குரங்குகளுக்கு கொய்யாப்பழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப் பொடியை நிரப்பிக் கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஹாரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்துவார்கள். என்னால் எத்தனை யோசித் தாலும் புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஏன் அத்தனை வெறியுடன் மதுக் குப்பிகளை காட்டுக் குள் வீசி எறிகிறார்கள் என்பது.” 

“மற்ற எந்த மிருகத்தை யும்விட யானைக்கு மிக அபாயகரமானது அந்தக் குப்பி
உடைசல். யானையின் அடிக் கால் ஒரு மணல் மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து, மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன் மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுங்கப்புதைந்துவிடும். இருமுறை அது காலைத் தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே சென்றுவிடும். அதன் பின்னால் யானை நடக்க முடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். முக்கியமான குருதிப் பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டு விட்டதென்றால் அதன் பின் யானை உயிருடன் மிஞ்சாது.”
சுந்தர்: மை காட்! இப்போது புரிகிறதா எப்படி கீழ்த்தரமான மனிதர்கள் தங்களின் கீழ்த்தரமான செயல்களால் யானைகளை  சாகடிக் கிறார்கள் என்று?! யானைகளின் வீடு எது?

சத்யா: காடு.யானைகளின் வீட்டிற்குள் புகுந்து அவற்றைக் காயப்படுத்துகிற, அவற்றைச் சாகடிக்கிற செயல்களை செய்யும் மனிதர்களை எப்படி தண்டிப்பது? யானைகள் காட்டு விலங்குகள் என்றால், அவை விரும்பி வாழும் வீடு காடு என்றால் அவற்றை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்து நமது கோவில்களில் வைப்பது...

சுந்தர்: பெருந்தவறு. அவற்றைக் கொண்டு வந்து விலங்குக் காட்சியகங்கள், சர்க்கஸ் கூடாரங்கள், தெருக்களில் அவற்றை வைத்து வித்தை காட்டி மனிதர்கள் காசு பார்ப்பது...

சத்யா: பெருந்தவறு. கிளி, மைனா, லவ் பேர்ட்ஸ் என்று வெளியில் பறந்து திரிய விரும்பும் பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பது...

சுந்தர்: பெருந்தவறு.
சத்யா: சரி, இந்த கொரோனா நோய் எங்கிருந்து, எப்படி வந்தது?
கொரோனா கிருமிகள் வெளவால்கள், பறவைகள், காட்டு விலங்குகளில் உள்ளன என்பது ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்கள் நன்கறிந்த ஒன்று. விலங்குகளில் உள்ள கிருமி எப்போது மனிதனுக்குத் தாவும்?
சத்யா: அது வாழ்ற வீட்டை அழிச்சு அதை வெளியே துரத்துறப்போ.
காட்டை அழித்து, உணவு, மருந்துகளுக்காக காட்டு விலங்குகளைக் கொன்று தின்றால், அவற்றைக் கடை போட்டு விற்றால், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், விலங்குகளில் வாழும் இந்தக் கிருமி மனிதனுக்குப் பரவுவதில் வியப்பேது?

சுந்தர்: 2002ல் வந்த சார்ஸ் (ளுஹசுளு), இப்போ வந்து உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி, 8 இலட்சத்திற்கும் மேலே மனிதர்களைக் கொன்றுள்ள இந்த கோவிட்-19 (ஊடீஏஐனு-19 )... இதெல்லாம் ஏன் முதல்ல சீனாவுல தோன்றுது?
காட்டு விலங்குகளின் இறைச்சியின் மீது உள்ள மோகத்தால் அவற்றைக் கொன்று தின்று ஏப்பம் விடுவதும், அவற்றின் இறைச்சியை பல இடங்களில் கடை போட்டு விற்பதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் மற்ற நாடுகளை விட சீனாவில் தான் மிக அதிகமாக நடக்கிறது. அதனால் தான்...
சத்யா: இப்போ புரியுது. விலங்குகளைக் கொல்ற மனிதனை கிருமி கொல்லுது. அப்படித் தானே? 
(தொடரும்)

Comment