No icon

Pope Francis and Lent

தவக்காலமும் நம் திருத்தந்தையும்

தவக்காலமும் நம் திருத்தந்தையும்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிந்தனைகள் மாற்றத்திற்கான தூண்டுதல்கள் என்றால் மிகையாகாது. அவரது சிந்தனைகள் சிலவற்றை தவக்காலத்தில் சிந்திப்பது பொருத்தமானது.

திருத்தந்தை பிரான்சிஸ்; பொன்மொழிகள்

   “எங்கு துன்பம் உள்ளதோ அங்கு கிறிஸ்து பிரசன்ன மாகிறார்”

   “திருஅவையின் உண்மையான பெருமை சிலுவையில் அடங்கியுள்ளது. திருச்சிலுவையின் அவமானத்

தோடு வாழ்வதற்குக் கிறிஸ்தவர்கள் வெட்கப்படக் கூடாது”

  “கிறிஸ்துவைப் பின்செல்வது ஒரு தொழில் அல்ல. அது சிலுவையின் வழி”

  “உலகின் தீமைக்கு இறைவன் தந்த பதில் சிலுவை. சில வேளைகளில் தீமைக்கு இறைவன் பதிலளிக்காமல், மௌனம் காப்பதுபோல தெரியலாம். ஆனால், இறைவன் பதிலளித்து விட்டார். அவர் தந்த பதில் கிறிஸ்துவின் சிலுவை”

  “அன்பு, கருணை, மன்னிப்பு ஆகியவற்றைக் கூறும் ஒரு வார்த்தை சிலுவை. அது இறைவனின் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அதாவது, கடவுள் நம்மை அன்பு செய்வதன் வழியாகத் தீர்ப்பிடுகிறார்”

 “உண்மையான அதிகாரம் என்பது பணியில் மட்டுமே அமைகின்றது”

 “அதிகாரத்தில் இருப்பவர்களின் கண்கள் எப்போதும் சிலுவையில் இருக்கும் கிறிஸ்துவை நோக்கியபடி இருப்பது, அதிகாரத்தின் முழுப் பொருளை உணர்த்தும்”

  நாம் பாவிகள் என்பதை உணரும் வேளையில் இயேசுவைச் சந்திக்கக்கூடிய அற்புதம் நிகழ்கிறது.

 இயேசுவின் சக்தியை உணர்ந்த பேதுரு, அவருக்கு முன் தான் ஒரு பாவி என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால், இயேசுவின் சக்தியையும், அறிவுத் திறனையும் அறிந்த பரிசேயர்கள், அவரைக் கண்டு அதிசயிக்காமல், தங்கள் அகம்பாவத்தில் இன்னும் ஆழ்ந்து சென்றனர். இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடும் புனித பேதுரு, தன்னை ஒரு பாவி என்றும் அறிக்கையிடுகிறார் என்று கூறியத் திருத்தந்தை, தீய ஆவிகளும், இயேசுவை மானிட மகன் என்று கண்டுகொண்டன என்றாலும், அவை, தங்கள் அகம்பாவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. இயேசுவை "ஆண்டவர் என்று அறிக்கையிடுவது எளிது; ஆனால், அதேநேரம், நாம் பாவிகள்" என்று அறிக்கையிடுவது கடினம்.

  துன்பங்களின் மனிதராகிய இயேசுவுக்கும், நம் துன்பங் களுக்கும் இடையே ஒத்திசைவு இருக்கின்றது.

  கடவுளின் அன்பைக் குறை சொல்லாமலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

   இரக்கம் இல்லாத இடத்தில் நீதியும் இருக்க முடியாது. எண்ணற்ற வேறுபாடுகள் மத்தியிலும், ஒவ்வொரு திருஅவையும், கிறிஸ்தவ சமூகமும் இரக்கத்தின் உறைவிடமாக விளங்குவதாக.

  தம்மைத் தேடும் எவருக்கும், குறிப்பாக, தம்மை விட்டுத் தொலைவில் இருப்பவருக்கு இயேசு கதவுகளைத் திறந்து வைக்கிறார்.

 தம்மில் நம்பிக்கை வைப்பதாக அறிக்கையிட்டவர்கள், ஏன், சிலவேளைகளில் பிறருக்குக் கதவுகளை மூடி தம்மீது நம்பிக்கை வைக்கத் தவறியவர்கள் என எல்லாருக்கும் கிறிஸ்து தமது கருணையை முழுமையாக வழங்குகிறார்

Comment