No icon

குடந்தை ஞானி

அருள்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா வழக்கை எதிர்கொள்ள வேண்டும் 

அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா அவர்கள் குழித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை என்கிற ஒரு இடத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்புக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கிறிஸ்துவர்கள் இந்நாட்டில் எதிர்கொள்ளும் இன்னல்களை குறித்து பேசிய போது திமுக அமைச்சர்களையும், இந்திய நாட்டின் பிரதமர் மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பூமித்தாயையும் தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, 30 வழக்குகளின் அடிப்படையில் ஜூலை 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் இவரை நிபந்தனை பெயிலில் விடுதலை செய்தது. நிபந்தனை பெயிலில் வெளிவந்த அருட்பணியாளர் தன் மீது இருக்கும் வழக்குகளையும், எப்.ஐ.ஆரையும் நீக்கும்படி நீதிமன்றத்திடம் மனு கொடுத்திருந்தார். 
இந்த மனுவை வாசித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ஊரடங்கின் பொழுது கூட்டத்தை கூட்டுவது பற்றி அந்நேரத்தில் அரசாங்கம் எந்த ஒரு வழிமுறையும் தரவில்லை. எனவே அந்த குற்றத்திலிருந்து அருட்பணியாளர் விடுவிக்கப்படுகிறார். ஆனால் பிற மதங்களை குறித்தும், அமைச்சர்களை குறித்து இழிவாக பேசியதாகவும், இந்துக்களை ஒருபக்கமும் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் மறுபக்கமும் நிறுத்தி இரு குழுக்களுக்கிடையே வன்முறையைத் தூண்டுவது போல் பேசியதாகவும் அவர் மீது போடப்பட்ட வழக்குகளை அவர் சந்தித்துதான் ஆக வேண்டும். 
தனது தவறை உணர்ந்து அவர் பிறகு மன்னிப்பு கேட்டார். இருப்பினும் இந்த குற்றத்திற்கான வழக்கை அருட்பணியாளர் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனெனில் அருள்தந்தை பொன்னையா இந்துக்களின் மத உணர்வுகளை சீர்குலைத்துள்ளார். மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தார், மற்றவர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்வதார். அவர் பேசிய வார்த்தைகள் பிறருக்கு ஆத்திரமூட்டி வன்முறை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலே அவர் மீது  இந்த வழக்கு பதியப்பட்டது. 
மேலும் மத மாற்றங்களுக்கு எதிராக போராடுபவர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு பொய் கடவுளாகவோ அல்லது அந்நியக்கடவுளாகவும் சித்தரிப்பதில்லை, மாறாக அவர் ஒருவரே கடவுள் என்றும் மற்ற அனைத்து தெய்வங்கள் பொய் தெய்வங்கள் என்று ஒலிக்கப்படும் ஏகபோக குரலுக்கு எதிராகவே இவர்கள் போராடுகிறார்கள் என்று நீதிபதி தனது 31 பக்க அறிக்கையில் கூறினார். முன்னதாக ருஊஹ செய்தி நிறுவனத்திடம் பேசிய குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியும், மதுரை பேராயருமான மேதகு ஆண்டனி பாப்புசாமி அவர்கள், தந்தை பொன்னையாவால்  கூறப்பட்ட கருத்துகளை ஏற்கவில்லை என்றும், இத்தகைய அறிக்கைகளை கத்தோலிக்க திருஅவை ஆதரிக்காது என்றும் கூறினார்.  
 

Comment