No icon

குடந்தை ஞானி

கோயம்புத்தூரில் தாக்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயம்

கோயம்புத்தூர் ராமநாதபுரத்தை மறைமாவட்ட தளமாகக் கொண்டு சீரோ மலபார் திரு அவை தன் பணியை செய்து வருகின்றது. இம்மறைமாவட்டத்தின் ஹோலி டிரினிட்டி பேராலயத்திற்கு அருகில் இருக்கும் ஒரு திருத்தலத்தின் வளாகத்தில் இருந்த புனித செபஸ்தியார் சுரூபமானது, ஜனவரி 23 ஆம் தேதி  மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து இம்மறைமாவட்ட ஆயர் பால் அல்லப்பட் "இது மதச்சார்பின்மை மீதான தாக்குதல்" என்று கூறினார்.

திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தை பாஸ்டின் ஜோசப் "எங்களுக்கு யாருடனும் எந்த முன்விரோதமும் இல்லை. இந்நிலையில் கண்ணாடிப் பெட்டியை உடைத்து சுரூபத்தை உடைத்துள்ளனர். இதைக் கண்டித்து பேராலயம் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். இது சம்பந்தமாக காவல்துறையினர் இருவரைக் கைது செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் மேலும் இருவரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்," என்று கூறினார்.

கிறிஸ்தவ விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு இந்து மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் முதல் பார்வையில் தெரிகிறது என்று காவல்துறையினர் கூறினர். ஏனெனில் கைது செய்யப்பட்டவர்கள் இந்துக் குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த செயல்படும் இந்து ஆதரவு அமைப்பான இந்து ஐக்கிய முன்னணியின் (இந்துக்களின் கூட்டு முன்னணி) உறுப்பினர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

Comment