No icon

ஊடகத்துறையில் முன்னோடியான

சென்னை சலேசிய தீபிகாவின் (Dbica) வெள்ளி விழாக் கொண்டாட்டம்

சென்னை சலேசிய மாநிலத்தின் சமூகத் தொடர்பு நிறுவனமாக உள்ள தீபிகா (Dbica), நிறுவப்பட்டதன் வெள்ளிவிழாவை ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடியது. கடந்த 25 ஆண்டுகளாக, ஒலி-ஒளிப்பேழைகள் வழியாகவும், ஊடகக் கல்வி வழியாகவும், ஊடக ஆலோசனை வழியாகவும், ஊடக ஆராய்ச்சி வழியாகவும் மிகப்பெரிய அளவில் தமிழகத் திரு அவைக்கு பெரிதும் உதவியுள்ளது. மேலும் இளம் இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், நடிகர்கள் என்று கலைத்துறையில் அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளது இந்நிறுவனம் தமிழகத் திரு அவை வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க இந்நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்வில் அகில உலக சலேசிய துறவறச் சபையின் சமூகத் தொடர்புக்கான பொது ஆலோசகர் அருள்பணி. கில்டாசியோ மென்டஸ் . அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார். மாதா தொலைக்காட்சியின் முதன்மை செயல் அதிகாரி அருள்பணி. டேவிட், எடிட்டர் பி.லெனின், இயக்குநர் ராஜீவ் மேனன், இயக்குநர் வசந்த், திரைப்படத் தொகுப்பாளர் அக்கினேனி ஸ்ரீகார் பிரசாத், திரைப்பட இயக்குநர் ரவி வர்மன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர். சென்னை சலேசிய மாநிலத் தலைவர் அருள்பணி. கே.எம்.ஜோஸ் ., மாநிலத் துணைத்தலைவர் அருள்பணி.டான் போஸ்கோ சே., பொருளாளர் அருள்பணி.எட்வின் வசந்தன் . ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீபிகாவின் முன்னாள் இயக்குநர்கள் அருள்பணியாளர்கள் ஜோ ஆன்ரூ ., ராஜ்குமார் மெர்வின் ., ஹாரிஸ் பாக்கம் ., ஜான் கிறிஸ்டி ., பிரான்சிஸ் சேவியர் . ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தற்போதைய இயக்குநர் அருள்பணி.எர்னஸ்ட் . அவர்கள் தம் உடன் உழைப்பாளர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.

Comment