No icon

ஆயர்கள் மாமன்றத்தின் புதிய தலைமைச் செயலர்

ஆயர்கள் மாமன்றத்தின் புதிய தலைமைச் செயலர்
ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலராக இதுவரைப் பணி யாற்றிவந்த கர்தினால் லொரென்ஸோ பால்திஸ்ஸேரி அவர்கள் பணிஓய்வு பெற விழைந்து அனுப்பிய விண்ணப் பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த மாமன்ற இணைச் செயலராகப் பணியாற்றிவந்த ஆயர் மாரியோ கிரெக் அவர்களை, ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலராக செப்டம்பர் 16 ஆம் தேதி புதனன்று நியமித்துள்ளார்.
இறையியலும் குற்றத் தடுப்பும்

கத்தோலிக்கத் திருஅவையில் இடம்பெறும் பாலியல் முறைகேடுகள் குறித்து, அண்மையில் வெளியிடப் பட்ட “இறையியலும் குற்றத் தடுப்பும் - திருஅவையில் பாலியல் முறைகேடுகள் குறித்த ஓர் ஆய்வு” என்ற நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முகவுரை எழுதியுள்ளார்.

பாலியல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடுவது என்பது, அனைவரின் வாழ்வு மதிக்கப்பட வேண்டும், குறிப்பாக, தங்களுக்காக குரல் எழுப்ப இயலாமல் இருக்கும் மிகவும் நலிந்தவர்களின் வாழ்வு மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அறிவிப்ப தாகும் என்று திருத்தந்தை, தனது முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். 

அருள்பணி டேனியேல் போர்டில்லோ டிரேவிசோ  அவர்கள் எழுதிய, “இறையியலும் குற்றத் தடுப்பும் - திருஅவையில் பாலியல் முறைகேடுகள் குறித்த ஓர் ஆய்வு” என்ற நூல், அண்மையில், இஸ்பானிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

’உலகை குணப்படுத்தல்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து, புதன் மறைக்கல்வி உரைகளில், தன் சிந்தனைகளை பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 16 ஆம் தேதி புதனன்று, ’இயற்கை பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டிய தேவை’ என்ற தலைப்பில் உரையை வழங்கினார்.
கடந்த இரு வாரங்களைப்போல், இவ்வாரமும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  வத்திக்கானிலுள்ள புனித தமாசோ வளாகத்திலேயே, திருப்பயணிகளைச் சந்தித்து உரை வழங்கினார். முதலில், தொடக்க நூல் இரண்டாம் பிரிவில் தொ.நூ. (2,8-9.15) காணப்படும், ஏதேன் தோட்டத்தில் மனிதரை இறைவன் குடியமர்த்திய பகுதி, பல மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின், திருத்தந்தை தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

மறைக்கல்வியுரை
அன்பு சகோதரரே, சகோதரிகளே,  இன்றைய  கொள்ளைநோயைப் பற்றி,  திருஅவையின் சமூகப் படிப்பினை களின் ஒளியில், சிந்தனை களைப் பகிர்ந்துவரும் நாம், மற்றவர்கள் மீது அக்கறைகொண்டு செயல்படும் மக்களுக்கு, குறிப்பாக,நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் நிலையிலுள்ளோர் ஆகி யோருக்கு தாராள மனதுடன் அக்கறை காட்டி சேவையாற்றுவோர் குறித்து சிந்தித்தோம். அதேவேளை, இவ்வுலகின் இயற்கை வளங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டிய கடமையைப் பற்றியும் சிந்தித்தோம். இவ்வுலகின் இயற்கை அழகை பலவேளைகளில் நாம் இரசிக்கத் தவறியதுடன், அதன் வளங்களைச் சுரண்டியும் வந்துள்ளோம். இவ்வுலகில், இறைவனின் படைப்பிற்குள் நமக்கேயுரிய இடத்தைக் குறித்தும், இவ்வுலகையும், ஒருவர் ஒருவரையும் மதித்து அக்கறை காட்ட நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கலையை நாம் புதிதாக கற்றுக்கொள்ளவேண்டும். ஒன்றில் ஒன்று தொடர்புடையதாக, ஒன்றையொன்று சார்ந்திருக்கும், இவ்வுலகை நாம் மௌனமாக ஆழ்ந்து சிந்திக்கும்போது, அனைத்துப் படைப்புகளின் மதிப்பையும், உண்மை அர்த்தத்தையும் கண்டுகொள்வோம். ஏனெனில், படைப்புகள்ஒவ்வொன்றும், தங்களுக்கேயுரிய வழியில் இறைவனின் முடிவற்ற ஞானம், நன்மைத்தனம், மற்றும், அழகைப் பிரதிபலிக்கின்றன. நாம், படைப்புகள் அனைத்தோடும் எவ்வாறு ஒருங்கிணைந்து செல்ல வேண்டியவர்கள் என்பதையும், இயற்கை வளங்களை, பொறுப்புடன் கண்காணிக்க வேண்டியவர்கள் என்பதையும், வருங்காலத் தலைமுறைகளுக்காக, அவற்றைப் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதையும், படைப்பு குறித்த நம் ஆழ்ந்த சிந்தனை கற்றுத்தரும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.
மன்னிப்பின் சக்திக்கு நம் இதயங்கள் திறக்கப்படவேண்டும்

தன்னிடம் கடன்பட்ட ஊழி யனை மன்னித்த அரசன் பற்றியும், மன்னிப்புப்பெற்ற ஊழியன் தன்னிடம் கடன்பட்டவரை மன்னிக்க மறுத்தது குறித்தும் விவரிக்கும் இயேசுவின் உவமையை மையப்படுத்தி, செப். 13 ஆம் தேதி ஞாயிறு மூவேளை செப உரையை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, செப்டம்பர் 13 ஆம் தேதி ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் மன்னிக்க மறுத்த பணியாள்உவமை (மத். 18:21-35), குறித்து, தன் மூவேளை செப உரையில், எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘என்னைப் பொறுத்தருள்க;எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்’ என்ற சொற்களை இருவரின் வாயிலிருந்து இந்த உவமையில் கேட்கிறோம், ஒருவர் இவ்விண்ணப்பத்தை முன்வைத்து மன்னிப்பைப் பெறுகிறார், இன்னொருவர் மன்னிப்புப் பெற்றவராலேயே மன்னிப்பு மறுக்கப்படுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

மிகப்பெரிய அளவு கடன் மன்னிக்கப் பட்டவர், தன்னிடம் கடன்பட்டவரின் சிறியஅளவு கடனை மன்னிக்க மறுத்து அவரைச் சிறைக்கு அனுப்பினார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிக்கப் பட்டவர் மன்னிக்க மறுத்ததைத் தெரியவந்த மன்னர், அந்த ஊழியனை தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கியதைப்பற்றி குறிப்பிட்டார்.

இறைவனும் மனிதனும்
இந்த உவமையில் நாம், அரசனின் வடிவில் இறைவனையும், மன்னிக்க மறுத்தஊழியனின் வடிவில் மனிதனையும் காண்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் நடவடிக்கையில், நீதி, இரக்கத்தால் மேற்கொள்ளப்படுவதை நாம் காண்கிறோம், ஆனால், மனிதனின் நடவடிக்கையில், நீதியென்ற எல்லைக்குள் மன்னிப்பு சுருங்கிவிடுகிறது என எடுத்துரைத்தார்.
வாழ்வின் செயல்பாடுகள் அனைத்திற்கும் நீதியால் மட்டும் தீர்வு காணமுடியாது என்பதால், மன்னிப்பின் சக்திக்கு நம் இதயங்கள் திறக்கப்பட வேண்டும் என இயேசு எதிர்பார்க்கிறார்; ஏனெனில், இன்றைய உலகில் இரக்கத்தின் நிறைவான அன்பு அதிகம் அதிகமாக தேவைப்படுகின்றது, என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்திக் கூறினார்.

எப்போதும்  மன்னிப்பை வழங்க...
புனித பேதுருவின் கேள்விக்கு இயேசு, ’எழுபது தடவை ஏழுமுறை’ என்று பதில் வழங்கியது, நாம் எப்போதும் மன்னிப்பை வழங்க அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது எனக் கூறிய திருத்தந்தை, நம் வாழ்க்கை முறையாக, மன்னிப்பும் இரக்கமும் இருந்தால், எத்தனையோ மோதல்களும், போர்களும், வேதனைகளும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கூறினார்.
தம்பதியரிடையேயும், பெற்றோர் பிள்ளை களிடையிலும், சமுதாயத்திலும், அரசியலிலும், அனைத்து மனித உறவுகளிலும், இரக்கத்தின் அன்பை செயல்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

மன்னிக்க அழைக்கும் செபம்
நாம் சொல்லும் "விண்ணுலகில் இருக்கிறஎங்கள் தந்தையே" என்ற செபத்தில், "எங்களுக்குத் எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல், எங்கள் குற்றங்களை மன்னியும்" என்ற சொற்களின் பொருளை நாம் முற்றிலும் உணர வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் பிறரை மன்னிக்கவும், அன்புகூரவும் மறுத்தால், நாமும், இறைவனின் மன்னிப்பையும், அன்பையும், எதிர்பார்க்க முடியாது என மேலும் கூறினார்.

Comment