No icon

திருநீற்றுப் புதன் வழிமுறைகளில் மாற்றங்கள்

திருநீற்றுப் புதன் வழிமுறைகளில் மாற்றங்கள்
திருப்பீடத்தின் இறைவழிபாட்டு பேராயம், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளை மனதில் கொண்டு, இவ்வாண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி சிறப்பிக்கப்படும் திருநீற்றுப் புதனன்று பின்பற்றவேண்டிய வழிமுறைகளில், ஒரு சில மாற்றங்களை  திருப்பீடத்தின் திருவழிபாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், அருள்பணி குயிதோ மரீனி ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியிட்டார்.

திருநீற்றுப் புதன் திருப்பலியின்போது, பீடத்தில் வைக்கப்பட்டுள்ள சாம்பலை ஆசீர்வதிக்கும் செபங்களை அருள்பணியாளர் கூறியபின், சாம்பலின் மீது அர்ச்சிக்கும் நீரைத் தெளிப்பார் என்றும், அதைத் தொடர்ந்து, "மனம் திரும்பி, நற்செய்தியை நம்புங்கள்" அல்லது, "மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்" என்ற சொற்களை, பீடத்தில் இருந்தவண்ணம் ஒரே ஒரு முறை மட்டுமே அருள்பணியாளர் கூறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அருள்பணியாளர் தன் கரங்களை சுத்தப்படுத்திக் கொண்டு, முகத்தில் கவசம் அணிந்துகொண்டு, மக்களுக்கு சாம்பலை வழங்கும்போது, அந்த சாம்பலை அவர்கள் மீது தெளிக்கவேண்டும் என்றும், அவ்வேளையில், எந்த ஒரு செபத்தையும் சொல்லக்கூடாது என்றும் திருவழிபாட்டு பேராயம் அறிவித்துள்ளது.

Comment