No icon

நவம்பர் 10 

புனித பெரிய சிங்கராயர்

புனித பெரிய சிங்கராயர் டஸ்கனி நாட்டில் பிறந்தார். நம்பிக்கைக்கு உரியவராகவும், அறிவுப் புலமை மிகுந்தவராகவும் வளர்ந்தார். “ஆண்டவரே, உமது சிலுவையானது ஆசீர் அனைத்திற்கும் ஊற்று, அருள் வரங்களின் உறைவிடம், விசுவாசிகள் பலவீனத்தில் பலம் அடைகிறார்கள்என்றார். உலகின் ஒளியான கிறிஸ்துவின் வழியில் நடந்து, திரு அவையின் ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்தினார். மனத்திடனும், உடல் வலிமையும், தூய ஆவியின் அருள்பொழிவும் பெற்றபோது தப்பறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். 440 ஆம் ஆண்டு, திருத்தந்தையானார். நற்கருணை ஆண்டவரிடம் அடைக்கலம் தேடி திரு அவையில் ஒற்றுமை நிலவிட அயராது உழைத்தார். அன்னை மரியாவின் துணையுடன், திரு அவையை வழி நடத்திய பெரிய சிங்கராயர், 461 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் இறந்து, திரு அவையின் மறைவல்லுநரானார்.        

Comment