No icon

நவம்பர் 11

புனித மார்ட்டீன்

புனித மார்ட்டீன் 316 ஆம் ஆண்டில் பிறந்தார். இராணுவத்தில் படைத்தலைவனாக இருந்தபோது, கிறிஸ்தவ போர்வீரர்களிடம் நெருங்கிப் பழகினார். ஏழைகளின் நண்பராக வாழ்ந்த மார்ட்டீன், திருமுழுக்கு பெற்று, கிறிஸ்தவரானார். கிறிஸ்துவை தலைவராகவும், நண்பராகவும் ஏற்றுபோது, இராணுவப் பணியை துறந்தார். ஏழ்மை மிகுந்த கோலம் பூண்டு, துறவியாக மாறி இறைவார்த்தையை தியானிக்கவும், செபிக்கவும் செய்தார். தன் வருவாயில் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கொடுத்தார். குளிர் காலத்தில் உணவு, உடை, உறைவிடமின்றி தவித்த மக்களுக்கு உதவினார். ஆயராக அருள்பொழிவு பெற்று, நற்செய்தியைப் போதித்தார். கடின வேலை, ஏழ்மையான வாழ்வு, இறைபற்று மிகுந்த செபம், ஆழ்நிலை தியானம் ஆகியவற்றின் வழியாக ஆண்டவரை மாட்சிமைப்படுத்தி, 397 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் நாள் இறந்தார்.

Comment