No icon

நவம்பர் 16   

புனித ஜெத்ரூத்

புனித ஜெத்ரூத் ஜெர்மனியில் 1256 ஆம் ஆண்டு, ஜனவரி 6 ஆம் நாள் பிறந்தார். இலக்கியம், மெய்யியல் கற்று, இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்ய துறவற வாழ்வை தேர்ந்தெடுத்தார். அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு, நித்தம் நற்பண்பில் வளர்ந்தார். “இறைவழிபாடு என்பது செபவாழ்வின் அடித்தளம்என்றார். கிறிஸ்துவின் பொருட்டு, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்றார். இறையன்புக்காக நற்கருணை முன்பாக பலமணிநேரம் செபித்து, இறையருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தார். உயர்ந்தோர் - தாழ்ந்தோர், படித்தவர் - படிக்காதவர், பணக்காரர்-பாமரர் அனைவரிடமும் நட்புடன் பழகினார். இயேசு காட்சி தந்து, “இயேசு, மரியா, சூசை என்று ஒருமுறை செபிக்கின்றபோது, உத்தரிக்கிற ஒரு ஆன்மா மீட்புபெறும்என்றார். உத்தரிக்கிற ஆன்மாக்கள் மீட்பு பெற வேண்டுதல் செய்த ஜெத்ரூத், 1302 ஆம் ஆண்டு இறந்தார். இவர் பயணிகளின் பாதுகாவலர்.

Comment