No icon

வெற்றிகரமாக முடிந்த அகில இந்திய இலத்தின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் 31வது பொதுக்குழு மன்றம்

வெற்றிகரமாக முடிந்த அகில இந்திய இலத்தின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் 31வது பொதுக்குழு மன்றம்

செங்கல்பட்டு மறைமாவட்டம், மகாபலிபுரத்தில் உள்ள  ஜோ உருவாக்க மையத்தில் அகில இந்திய ஆயர் கத்தோலிக்க  பேரவையின் 31வது பொதுக்குழு மன்றம் ஐனவரி மாதம் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. சனவரி 8 ஆம் தேதி நடந்த தொடக்க விழா நிகழ்வுகளைப் பற்றி செய்திகளை ஏற்கெனவே நம் வாழ்வு வார இதழில் வெளியிட்டிருந்தோம். 

சனவரி 8 ஆம் தேதி பிற்பகல் அகில இந்திய கத்தோலிக்க  ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு பணிக்குழுவின் தலைவர் மேதகு ஆயர் ராபி மஞ்சலி அவர்கள், நற்செய்தியின் அறிவிப்பின் நிகழ்வு கள்:  கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களும் பெற்றுக் கொண்ட ஊக்கமும்’ என்ற தலைப்பில் ஒளி ஒலிக் காட்சி களைப் பயன்படுத்தி உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றி, இவ்வமர் வுக்கு உரிய அடித்தளம் அமைத்தார். அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணைத்தலை வர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் இவ்வமர்வை சிறப்பாக நெறிப் படுத்தினார்.

மாலை நடந்த அமர்வின் போது, புனே ஆயர் மேதகு தாமஸ் டாப்ரே ‘இந்தியாவில் திருஅவை செய்யும் ஆற்றொனா அளப்பரிய பணி’  என்பது பற்றி கருத்துரை வழங்கினார். கோவா பேராயர் மேதகு பிலிப் நேரி பாங்குற நெறிப்படுத்தினார்.

நற்கருணை ஆராதனை யோடு கூடிய மாலை செபத் தோடு முதல்நாள் இனிதே நிறைவுற்றது. இரவு உணவுக்குப் பின் ஆயர்களின் ஒன்று கூடுகை நடைபெற்றது. சகோதர உணர் வோடு அனைவரும் வந்து தங்களுடைய தோழமையை வெளிப் படுத்தி நட்புப் பாராட்டினார். கர்வார் ஆயர் மேதகு டெரேக் பெர்னாண்டஸ் இதனை ஒருங் கிணைத்து தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் வழி நடத்தினார். இரண்டாம் நாள் தலைவர் கர்தினால்  ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களின் தலைமை யில் திருப்பலி நடைபெற்றது. அவர்தம் மறையுரையும் வழக்கம் போல் செறிவு மிக்கதாக இருந்தது. திருப்பலியைத் தொடர்ந்து அனைத்து ஆயர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட னர்.  காலை உணவுக்குப் பிறகு நடைபெற்ற கருத்தமவர்வில் சேசு சபை பணியாளர் அருள் முனைவர் ருடால்ப் ஹெரேடியா நற்செய்தி அறிவிப்பில் நம்முன் உள்ள சவால்களும் மகிழ்ச்சி நிறை சாட்சிகளாவதற்கான செயல் திட்டமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மதுரை பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி இவ்வமர்வை நெறிப் படுத்தினார்.  முற்பகல் நடந்த இன்னுமொரு கருத்தமர்வில்

சேலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த செயப்பிரகாசம்,  குளுனி சபையைச் சேர்ந்த அருள்சகோதரி நிர்மலா, பரேலி அனுகிரகா ஆசிரமத்தைச் சேர்ந்த அருள் பணியாளர் ருடால்ப் ரோட்ரிகசு மியாவோ மறைமாவட்ட ஓய்வுப் பெற்ற ஆயர் மேதகு ஜார்ஜ் பள்ளிபரம்பில் ஆகியோர் தத்தம் சாட்சிய வாழ்வு குறித்து சான்றுப் பகர்ந்தனர். இவ்வமர்வை ராய்ப் பூர் பேராயர் விக்டர் ஹென்றி தாக்கூர் நெறிப்படுத்தினார். பிற் பகல் நடைபெற்ற கருத்த மவர்வில் அகில இந்திய ஆயர் பேரவையின் நற்செய்தி பறைசாற்றும் பணிக்குழுச் செயலர் அருள்பணியாளர் பன்னீர் செல்வம் ‘புதிய முறையில் நற்செய்தி அறிவிப்புக்கான புதிய உத்திகளும் புதிய வெளிப் பாடுகளும்’ என்ற தலைப்பில் கருத்துக்களைப் பகிர்ந்தார். விசாகப்பட்டினம் ஆயர் பிரகாஷ் மல்வரப்பு இவ்வமர்வை நெறிப்படுத்தினார்.

மாலை நடைபெற்ற மற்றுமொரு கருத்த மர்வில் மேற்கு மண்டல சமூகத் தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்முனைவர் நிகல் பாராட், ‘டிஜிட்டல் முறையில் நற்செய்தி அறிவிப்பும் டிஜிட்டல் உலகில் பொருந்திப் போவதும்’ என்ற தலைப்பில் கருத்துக்களைப் பகிர்ந்தார். போபால் பேராயர் மேதகு லியோ கொர்னேலியோ இவ்வமர்வை நெறிப்படுத்தினார்.

மாலை நடந்த தியான அமர்வில் அருள் முனைவர் அனில் தேவ் ஐஎம்எஸ், ஆன்மிகச் சிந்தனைகளை வழங்கி தியானத்திற்கு வழிவகுத்தார். நேபாள ஆயர் மேதகு பால் சிம்மிக் நற்கருணை ஆராதனையை வழிநடத்தினார். மீண்டும் இரவு உணவுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன. ஆயர்கள் தியானச் சிந்தனையோடு இல்லிடத்திற்கு திரும்ப இரண்டாவது நாள் அமர்வு இனிதே முடிவுற்றது.

ஜனவரி 10 ஆம் தேதி, மூன்றாம் நாள் துணைத்தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர் களின் தலை மையில் திருப் பலி யோடு தொடங்கியது. தியான வழி நடத்துநர் அருள் முனைவர் அனில் தேவ் ஐஎம்எஸ், மறை யுரையாற்றினார். முற்பகலில் இருமுறை தொடர்ந்து தியானச் சிந்தனைகளை வழங்கி அனைத்து ஆயர்களையும் தூய ஆவியின் துணையுடன் நெறிப்படுத்தினார். பிற்பகல் நடைபெற்ற அமர்வில் விவிலியம், மறைக்கல்வி, வழி பாடு ஆகிய பணிக் குழுக்களின் செயலர்கள் தத்தம் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித் தனர். முசாபூர் ஆயர் கஜத்தான் பிரான்சிஸ் நெறிப் படுத்தினார். மாலை நடைபெற்ற அமர்வில் பெண்கள் பணிக்குழு, இறையியல் மற்றும் மறைக்கோட்பாடு, மறைபரப்பு மற்றும் பிஎம்எஸ் உள்ளிட்ட பணிக்குழுக்களின் செயலர்கள் தத்தம் செயல்பாட்டு அறிக்கைiயும் தணிக்கை செய்யப்பட்ட வரவு

செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். குவகாத்தி பேராயர் மேதகு ஜான் மூலச்சிரா இவ்வமர்வை நெறிப்படுத்தினார். மாலை கலை நிகழ்ச்சிகளோடு மூன்றாம் நாள் இனிதே நிறைவுற்றது.

ஜனவரி 11 ஆம் தேதி, நான்காம் நாள் காலை பொதுச்செயலாளர் ஆயர் அனில்  கூட்டோ அவர்களின் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து அந்நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு அமர்வுகளின் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஏனைய பணிக்குழுக்களின் ஆண்டறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன. பிற்பகலில் மண்டல வாரியாக இரு செயல்பாட்டு அமர்வு நடைபெற்றது. மாலை தேசிய மற்றும் மண்டல ரீதியாக பணிக்குழுக்களின் தலைவர்கள் (ஆயர்கள்) ஒன்று கூடி கலந்தாலோசித்தனர்.

ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, ஆயராகி வெள்ளி விழாவைக் கொண்டாடும் கோவா பேராயர் மேதகு பிலிப் நேரி அவர்களின் தலைமையில் ஏனைய குருத்துவ மற்றும் ஆயர் திருநிலைப்பாட்டு வெள்ளி-பொன் விழா ஆயர்கள் பங்கேற்ற சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முற்பகலில் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களின் நெறிப்படுத்துதலில் அலுவல் அமர்வு நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகப் பொறுப்பாளர் களின் தேர்வும் புதிய பணிக்குழுக்களின் ஏற்பாடும் நடைபெற்றது. (விவரம் எதிர்பக்கத்தில்) பிற்பகல் ஆயர்கள் மட்டுமே பங்கேற்ற பிரத்யேக தனியமர்வு தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களின் நெறிப் படுத்துதலில் நடைபெற்றது. இரவு உணவுக்குப் பிறகு சிறிய கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆறாம் நாள் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை செப வழிபாட்டைத் தொடர்ந்து  மீண்டும் அலுவல் நேர அமர்வு நடை பெற்றது. முற்பகலில் மண்டல ரீதியாக தமிழக ஆயர்பேரவை உள்ளிட்ட தலத் திருஅவையின் ஆயர்பேரவை அறிக்கை அறிக்கைகள் சமர்பிக்கப் பட்டன. பிற்பகல் அனைத்து ஆயர்களும் செங்கல்பட்டு புறப்பட்டுச் சென்றனர். அனைவருக் கும் மிகப் பிரமாண்டமான வகையில் செங்கை மறைமாவட்டத் திற்கு உரிய பாணியில் பொதுவரவேற்பு ஆயர் இல்லவளாகத் தில் கொடுக்கப் பட்டது.

Comment