
திப்ருகார் மறைமாவட்ட ஆயராக, வாரிசுரிமை ஆயர் நியமனம்
- Author --
- Wednesday, 10 Mar, 2021
வடகிழக்கு இந்தியாவின் அஸ்ஸாம் மாநில திப்ருகார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் அயின்ட் அவர்கள், நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயர் ஆல்பர்ட் ஹெம்ரோம் அவர்களை, மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
1945ஆம் ஆண்டு பிறந்து, சலேசிய சபையில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு, திப்ருகார் மறைமாவட்ட ஆயராக, கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிய ஆயர் ஜோசப் அயின்ட் அவர்கள், பணி ஓய்வு பெறும் வயதை, கடந்த ஆண்டு நவம்பரில் எட்டியதைத் தொடர்ந்து, அவர் சமர்ப்பித்த ஓய்வு விண்ணப்பத்தை ஏற்று, புதிய ஆயரை திருத்தந்தை நியமித்துள்ளார். புதிய ஆயர் ஆல்பர்ட் ஹெம்ரோம் அவர்கள், 1999 ஆம் ஆண்டு அதே மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, அம்மறைமாவட்டத்தின் வாரிசுரிமை ஆயராக பொறுப்பேற்றார்.
Comment