
ஐவருக்கு இந்தூர் நீதிமன்றம் ஜாமீன்
- Author --
- Tuesday, 23 Mar, 2021
மத்திய பிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, 11 கிறிஸ்தவர்களை இந்தூர் காவல்துறையினர் இந்து வலதுசாரிகளின் புகாரை ஏற்று கைது செய்தனர். எஸ்விடி என்றழைக்கப்படுகிற இறைவார்த்தை சபையினருக்குச் சொந்தமான சன்ச்சார் கேந்திரா என்கிற கத்தோலிக்க ஊடக மையத்தில், பிரிவினை சபையைச் சேர்ந்த இவர்கள் செப வழிபபாட்டில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மதமாற்ற தடைச் சட்டத்தை மீறுவதாகக் கூறி 11 பேரை கைது செய்தனர். போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யாத காரணத்தால், பதினொரு பேரில் ஐவருக்கு இந்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
Comment