No icon

குடந்தை ஞானி

ஹலால் உணவு மற்றும் லவ் ஜிஹாத் பற்றி பேசிய அருள்பணியாளர்

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் முஸ்லீம்களை ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெலிச்சேரி மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர் அருள்பணியாளர் ஆண்டனி தரக்கடவில். இவர் மணிக்கடவு புனித தோமையார் ஆலயத்தில் ஆற்றிய திருப்பலி கொண்டாட்டத்தின் மறையுரையில், வேண்டுமென்றே ஹலால் உணவு மற்றும் லவ் ஜிஹாத் குறித்து  பேசியதாக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, அருள்பணியாளர் ஆண்டனி தரக்கடவில் மீது கண்ணூர் மாவட்டம் உலிக்கல் காவல் நிலையத்தில் ஜனவரி 25 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தன.

"ஹலால்" என்ற அரபு வார்த்தைக்கு "அனுமதிக்கத்தக்கது அல்லது சட்டபூர்வமானது" என்று பொருள். இஸ்லாம் மதமானது தன் மக்களுக்கு, எப்படி இறைச்சியை வெட்ட வேண்டும், எவ்வாறு வெட்டப்பட்ட இறைச்சியை உண்ண வேண்டும் போன்ற முறைகளைப் கற்றுக்கொடுக்கிறது. "லவ் ஜிஹாத்" என்பது முஸ்லீம் ஆண்கள் வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதைக் குறிக்கும் சொல்லாகும். அருள்பணியாளர் ஆண்டனி தரக்கடவில் இவ்விரு வார்த்தைகளையும் வேண்டுமென்றே தன் மறையுரையில் பயன்படுத்தி தங்களுக்கு கோபமூட்டி வெறுப்புவாதத்தை தூண்டுகிறார் என்று இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

ஆம், கோபமூட்டும் பேச்சுக்காக அருள்பணியாளர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருப்பினும், அவரை கைது செய்யவில்லை,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர், ஜனவரி 28 ஆம் தேதி UCA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள கிறிஸ்தவ லீக் என்ற அமைப்பானது, லவ் ஜிஹாத்தின் ஆபத்துகள் குறித்து கிறிஸ்தவ சமூகத்தினரிடையே ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வை பாராட்டியது. மேலும் முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரபலமான ஹலால் இறைச்சியை உண்பதை விட பிற சமூக உறுப்பினர்களிடையே உள்ள ஹலால் அல்லாத இறைச்சியை உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

Comment