No icon

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ஆயர் பேரவை கண்டனம்

பிப்ரவரி 14 அன்று இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தின் மீது குண்டுகள் நிறைக்கப்பட்ட ஒரு கார் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் பலியாயினர். நாட்டின் எல்லையைப் பாதுகாக்க வீரத்துடன் அயராது உழைத்து வரும் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் அருவறுக்கத்தக்க செயல் என இந்திய ஆயர்பேரவை கண்டித்துள்ளது.
வன்முறை எந்நாளும் எந்த ஒரு பிரச்சினை யையும் தீர்க்கப்போவதில்லை என்று இந்திய ஆயர்
பேரவையின் பொதுச்செயலர் ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் எடுத்துக் கூறியுள்ளார். துயரத்தில் மூழ்கி யிருக்கும் நாட்டு மக்கள் அனைவரோடும் சேர்ந்து இந்திய திருஅவையும் தனது அனுதாபத்தையும் செபங்களையும் பதிவு செய்கின்றது. புல்வாமாவில் நடந்த இத்தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு இஸ்லாமிய தீவிர வாதக்குழு பொறுப் பேற்றுள்ளது

Comment