
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - ஆயர் மஸ்கரனேஸ்
- Author குடந்தை ஞானி --
- Monday, 24 Jun, 2019
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பரந்து விரிந்து அதிகரித்து வருவது பெரும் அச்சத்தைத் தருவதாக உள்ளது என இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரேனஸ் தம் கவலையை வெளியிட்டுள்ளார்.
அண்மைத் தாக்குதல்களை நோக்கும்போது, பகை மையை விதைக்கும் குழுக்களைப் பற்றி மட்டுமல்ல, இவர்
களுக்குக் கொடுக்கப்படும் ஆதரவு குறித்தும் கவலைப்
பட வேண்டியிருக்கிறது; எனவே. இத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவேண்டிய அரசியல் தலைவர்களே, அவற்றிற்கு ஆதரவு அளிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் திரு அவையினர் தாக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், அவர்கள் ஏழை களுக்காகப் பணி யாற்று வதாகும் எனவும் ஆயர் மஸ்கரேனஸ் விளக்கமளித்தார்.
எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஏழைகள் மத்தியில் திருஅவையின் பணி தொடரும்; ஏழைகள் மீது திருஅவை கொண்டிருக்கும் அன்பை, எந்தச் சித்ரவதையாலும் தடுத்து நிறுத்தமுடியாது என்று உறுதிப்பட தெரிவித்தார்.
Comment