No icon

அருள்பணி. மரிய திலசால்

நம் வாழ்வின் புதிய நூல் வெளியீடு ‘விளையும் விதைகள் 1 & 2

மெய்யியலில் முனைவர் பட்ட ஆய்வை முடிக்கவுள்ள அருள்பணியாளர் மரிய திலசால் அவர்கள் எழுதிய முதல் நூலானவிளையும் விதைகள்என்னும், அன்றாட நற்செய்தியை அடிப்படையாகக் கொண்ட மறையுரைச் சிந்தனைகள் அடங்கிய நூலை, சென்னை - மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனி சாமி அவர்கள், டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். இந்நூலின் முதல் பிரதியை சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பணியாளரும் திரு அவைச் சட்டப் பேராசிரியருமான அருள்பணி. சி.எம். ஜோசப் அவர்களும் உயர் மறைமாவட்ட மறைப்பணி நிலைய இயக்குநர் அருள்முனைவர் ஜெயக்குமார் அவர்களும் முதல் இரு பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். ‘நம் வாழ்வுவெளியீட்டின் தரமான நூல்களில் ஒன்றாக வெளிவந்துள்ள இந்நூலுக்கு சென்னை - மயிலை பேராயரின் ஆசியுரையுடன் சென்னை பல்கலைக்கழக கிறித்தவ இயல் துறையின் தலைவர் அருள்முனைவர் ஞானா பேட்ரிக் அவர்கள் அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். மேலும் எப்.எம்.எம் சபையின் சென்னை மாநில அன்னை அருள்சகோதரி. நிர்மலா அவர்களும், அடைக்கல அன்னை சபையின் தலைமை அன்னை அருள்சகோதரி. மரிய பிலோமி அவர்களும் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். 512 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விற்பனை விலை ரூ. 350. ஆனால், ‘நம் வாழ்வுஅலுவலகத்தில் ரூ. 300க்கு நேரில் கிடைக்கும். (பார்க்க. பின் உள் அட்டைப் பட விளம்பரம்).

 

Comment