No icon

பத்திரிகையாளர் Eugenio Scalfari மறைவிற்கு திருத்தந்தை இரங்கல்

பரந்துபட்ட அறிவும், துணிவும், எதையும் வெளிப்படையாக எடுத்துரைக்கும் குணமும் கொண்ட Eugenio Scalfari அவர்களின் மறைவுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14,  வியாழனன்று இறைபதம் சேர்ந்த  L'Espresso, La Repubblica, என்னும் இரு நாளிதழ்களின் இணைநிறுவனரான  Eugenio Scalfari  அவர்களுடன் தான் கொண்டிருந்த நட்புறவை நினைவுகூர்ந்து பேசுகையில் இவ்வாறு திருத்தந்தை  கூறியுள்ளார்.

இறைப்பற்று, அசாதாரண அறிவு, மற்றும், செவிமடுக்கும் திறன்கொண்ட Scalfari  அவர்கள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், அனுபவங்கள், புத்தக வாசிப்பு மற்றும் தியானம் மூலம் எதிர்கால வாழ்வைப் பார்த்தவர் என்றும், அறிவியலில் ஆர்வமும் அன்பும் கொண்ட அவரின் இனிமையான, தீவிரமான உரையாடல்களை தன் மனதில் இன்றும் வைத்திருப்பதாகவும்  திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

அமைதியின் பாலமாக, உறுதியான நட்புறவுப் பாதையின் ஊற்றாக, மனிதர்கள் மற்றும்  நாடுகளுக்கிடையில் திகழ்ந்த Scalfari அவர்களின் மறைவு குறித்து வருந்துபவர்களுக்கு தன் ஆறுதலை வழங்குவதுடன், அவரின் ஆன்மா நிறையமைதியடையத் தான் செபிப்பதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

Comment