No icon

இதய அஞ்சலி (RIP)

உழைப்பால் உருக்கொடுத்தவர், உயர்ந்தவர் - அருள்தந்தை லூகாஸ்

முக்கடல் சங்கமமாகும் தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள ஐரேனிபுரம் எனும் கிராமத்தில் திரு ஞானமுத்து, திருமதி ஞானசவுந்தரி இவர்களின் ஆறு மகன்களின் மூன்றாவது மகனாக 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் அருள்தந்தை லூகாஸ் அவர்கள் இந்த மண்ணில் உதித்தார். தன்னுடைய தந்தை ஒரு சித்த மருத்துவராக அப்பகுதியில் சிறந்த மருத்துவ பணிகள் செய்து பலருக்கும் நல்ல உடல் நலத்தை கொடுத்ததோடு தன்னுடைய குடும்பத்தையும் பக்தியிலும் இறை நம்பிக்கையிலும் வளர்த்தவர்.

ஆரம்பக் கல்வியும் தொடக்கக் கல்வியும் தன்னுடைய ஊரிலிருந்த பள்ளியில் சிறப்பாக கற்றுத்தேர்ந்தார். குடும்பங்கள் இறை அழைத்தலின்  விளைநிலம் என்ற கூற்றுக்கிணங்க சிறுவயதிலேயே ஒரு குருவாக வேண்டும் என்ற ஆசை அவருக்குள் வளர்ந்தது. பதினோராம் வகுப்பு படித்து முடித்தவுடன் கோட்டாறு மறை மாவட்டத்தில் சேர்ந்து குருவாக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைமாவட்ட இளம் குரு மடத்தில் சேர்ந்து ஓராண்டு பயின்றார். ஆனால் இறை திட்டம் வேறாக இருந்தது. அவர் ஒரு துறவற சபையில் சேர்ந்து குருவாக வேண்டும் என்பதற்காக கிளாரட் சபை அருட்தந்தை மத்தேயு அவர்களின் வழிகாட்டுதலில் 1972 ஆம் ஆண்டு பெங்களூர் கிளாரட் சபையின் நவ சன்னியாச பயிற்சியில் சேர்ந்தார் ஓராண்டு நவ சன்னியாச பயிற்சியை முடித்தவுடன் 1973 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் கிளாரட் சபையில் தனது முதல் வார்த்தைப்பாடுகள் கொடுத்து தன்னை சபையில் ஓர் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

கல்லூரிப் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக மதுரை ககருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியில் 1973 ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை படித்து மெய்யியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

கல்லூரிப் படிப்பை கருமாத்தூரில் முடித்த பின்பு பெங்களூரில் உள்ள தூய பேதுரு இறையியல் கல்லூரியில் இறையியல் படிப்பை முடித்தார் படிப்பு முடித்த பின்னர் 1980 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருத்துவப் பணியை கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள குருசடி எனும் பங்கு தளத்தின் துணை பங்கு பணியாளராக ஓராண்டு முடித்தார். அதன்பின்பு 1981ஆம் ஆண்டு கருமாத்தூர் கிளாரட் பவன் குரு மடத்தில் குரு மாணவர்களுக்கு பொறுப்பாளராகவும் மற்றும் இறை அழைத்தல் இயக்குனராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

கிளாரட் சபை தமிழகத்தில் மேலும் வளர வேண்டும் என்பதற்காக 1984 ஆம் ஆண்டு கும்பகோணம் மறைமாவட்டம் மேதகு ஆயர் பால் அருள்சாமி அவர்களின் வழிகாட்டுதலில் சாக்கோட்டை எனுமிடத்தில் நிலங்கள் வாங்கியதோடு இரண்டு ஆண்டுகளில் 1986 இல் எழில்மிகு குரு மடத்தை கட்டினார்.

 கருமாத்தூர் பங்குத்தந்தை

மதுரை உயர்மறைமாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் பங்கின் பங்குத்தந்தையாக 1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் சீரும் சிறப்புடனும் பணியாற்றினார் இப் பங்கானது 1978ஆம் ஆண்டு உசிலம்பட்டி பங்கிலிருந்து பிரித்து உதயம உதயமான பங்கு கிளாரட் சபையினர் இடம் ஒப்படைக்கப்பட்டது. பங்கு ஆலயம் இல்லாததால் ஆரம்பத்தில கிளாரட் பவன் குருமட ஆலயமும் பின்நாட்களில் புனித கிளாரட் பள்ளியின் வளாகத்திலும் திருப்பலி மற்றும் ஆன்மீக வழிபாட்டு நிகழ்வுகள் நடந்து வந்த வேளையில் தந்தை லூகாஸ் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றவுடன் கோவிலாங்குளம் சத்தியநாத புரத்தில் 1989இல் தூய சவேரியார் ஆலயத்தை அழகுற கட்டி முடித்தார் அதே சமயத்தில் பங்கு ஆலயம் தனியாக கருமாத்தூ ரில் கட்ட வேண்டும் எனும் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து புதிய இடத்தை தேர்வு செய்து கட்டுமான பணிகளை தொடங்கி 1990ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் நாள் அழகு மிகுந்த பங்கு ஆலயமானது அர்ச்சித்து திறந்துவைக்கப்பட்டது

உயர் படிப்பு

கிளாரட் சபையின் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி 1990ஆம் ஆண்டு உரோமை நகருக்கு படிப்பதற்காக சென்றார் ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் வெவ்வேறு படிப்புகளை மேற்கொண்ட அவர் தனது தந்தையைப் போலவே சித்த மருத்துவத்தை கற்றுத்தேர்ந்தார் மற்றும் மருத்துவ சேவைகளையும் செய்துவந்தார் இந்த எட்டு ஆண்டுகளில் மீண்டும் ஆக தனது துறவற அழைப்பு பற்றி மிகவும் ஆழமாக சிந்தித்து அவர் மீண்டும் தனது சிறுவயது கனவான மறைமாவட்ட குருவாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க சபை தலைவர்களின் அனுமதியுட ன் மதுரை உயர் மறைமாவட்ட மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்கள் தந்தை லூகாஸ் அவர்களை முறைப்படி தனது மறைமாவட்டத்தில் இணைத்துக்கொண்டார்

மதுரை உயர் மறை மாவட்டத்தில் வத்ராயிருப்பு புதுப்பட்டி, அருப்புக்கோட்டை மற்றும் கவிராயபுரம் பங்கு தளங்களில் பங்குப் பணியாளர்கள் சிறப்புடன் பணியாற்றினார். பணி செய்த இடங்களில் மக்களின் தேவைகளை உணர்ந்து பள்ளி கட்டிடங்கள், சிறு ஆலயங்கள கட்டினார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ததோடு தான் கற்றிருந்த மருத்துவத்தை வைத்து பலருக்கும் உடல்நலம் அளிக்கும் பணியும் செய்துவந்தார். தன்னுடைய உடல்நலம் குன்றிய பொழுது ஆயர் இல்லத்தில் இருக்கக்கூடிய இல்லத்தில் தங்கி மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்தார் உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளது உரோமை நகருக்கு  கடந்த டிசம்பர் மாதம் சென்று அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாகி கடந்த ஏப்ரல் மாதம் இருபதாம் நாள் இயற்கை எய்தினார். இறையில் இணைந்தார்.

 குருத்துவப் பணியில் நாற்பது ஆண்டுகள் பல்வேறு இறைப் பணிகள் ஆற்றி, மக்கள் நலம் காத்து வந்தார். இறைவன் நிலை வாழ்வை பரிசாக கொடுக்க வேண்டுமென்று ஜெபிப்போம். அவருடைய நற்செயல்கள் அவரைப் பின் தொடரட்டும்.

ஒன்றுமில்லாமைக்கும் தன் உழைப்பால் உருகொடுத்தவர் உயர்ந்தவர் ஏழை மக்களின் இதயங்களில் வாழ்கின்றவர்.

 

 

 

 

 

 

 

 

Comment