No icon

Arulpani M.A. Joe

நாம் யார் தீர்ப்பிட?

ஆசான்: யார் இந்தத் தம்பி?

சத்யா: எங்க ஃபிரண்டு தான். பேரு குமரன். கொஞ்ச நாளாவே இவன் மனசும் முகமும் சரியில்லை. உங்களை வந்து பார்க்கலாமானு கேட்டான். கூட்டிட்டு வந்தோம்.

சுந்தர்: குமரன் நல்ல பையன்.

சத்யா: ஆமாம். சுந்தர் மாதிரி இல்ல. நெஜமாவே நல்ல பையன்.

சுந்தர்: அவங்க வீட்டுல தான்...

ஆசான்: குமரனே சொல்லட்டும்.

குமரன்: என்னோட அம்மாவும் அப்பாவும் ரொம்ப நல்ல மனுஷங்க. என் மேல ரெண்டு பேருக்குமே ரொம்பப் பிரியம், ரொம்ப அக்கறை.

சுந்தர்: உன்கிட்ட ரெண்டு பேருமே பிரியமா இருக்காங்க, சரி. அவங்களுக்குள்ள எப்படி? சண்டை போட்டுட்டே இருப்பாங்களா?

குமரன்: இல்ல. அவங்க பெருசா சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லை. ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பப் பிரியம், அக்கறை. சொந்தக்காரர்கள் சிலரோடு ஒப்பிட்டால் எங்க அம்மா அப்பா மாதிரி ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு அன்பும் அக்கறையும் உள்ளவங்க வேற யாரும் இல்லன்னு தான் சொல்லணும்.

சத்யா: அப்புறம் பிரச்சனைக்கு என்ன காரணம்?

குமரன்: நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அப்பா அம்மா கடற்கரைக்கு என்னை அழைச்சுக்கிட்டு போனாங்க. அன்னைக்குத் தான் அந்த முக்கியமான உண்மை எனக்குத் தெரிய வந்தது.

சுந்தர்: என்ன உண்மை?

குமரன்: நான் இத்தனை வருஷமா அப்பான்னு யாரை நினைச்சிருந்தேனோ, யாரை அன்பா, உரிமையாக் கூப்பிட்டேனோ, அவருடைய பிள்ளை இல்ல நான் என்பதை அம்மா சொன்னாங்க. அதிர்ச்சியா இருந்தது. அழுகையா வந்தது. என்னோட உண்மையான அப்பா நான் பிறந்து ஒரு வருஷம் ஆகிறதுக்குள்ள ஒரு சாலை விபத்தில் இறந்துட்டார்னு அம்மா சொன்னாங்க. முதல்ல வருத்தமா இருந்தாலும், அப்புறம் யோசிச்சு, ‘அவர் என்னைப் பெற்ற அப்பா இல்லை என்ற உண்மை தெரியாத அளவுக்கு என் மேல இவ்வளவு அன்போட, அக்கறையோடு வளர்த்திருக்காரு. அவருக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு புரிஞ்சது. நான் அவரு கைய புடிச்சிட்டு நன்றி சொன்ன போது, “நீ என் பிள்ளைதான்னு சொல்லிட்டு, என்னை அணைச்சுகிட்டார். அம்மா அழுதாங்க. எனக்கு இந்த உண்மையை தெரிவிச்சாகணும்ன்ற கடமையை அன்னைக்கு நிறைவேற்றிய திருப்தி அவங்களுக்கு.

சுந்தர்: எவ்வளவு நல்ல மனுஷனா அவர் இருக்கணும்! ‘பெற்றால் தான் பிள்ளையானு ஒரு பழைய படம் இருக்கு இல்லையா?

சத்யா: எல்லாம் அற்புதமா, நல்லபடியாத் தானே நடந்திருக்கு? அப்புறம் ஏன் உனக்கு கவலை?

குமரன்: ஒரு பத்து நாளைக்கு முன்னாடி நம்ம பாஸ்கர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்கு இருந்த அவனோட பாட்டி, என் பேரு, ஊரு, அப்பா, அம்மான்னு துருவித் துருவிக் கேட்டுச்சு. அம்மாவை அந்த பாட்டிக்கு தெரிஞ்சிருக்கு. “பிறகாவது அந்த ஆள கல்யாணம் பண்ணிக்கிட்டாளா, இல்லையா?” என்று பாட்டி கேட்டது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. வீட்டுக்கு வந்ததும் அம்மாக்கிட்ட அந்த பாட்டி சொன்னதைச் சொல்லிட்டுஇவரை நீ கல்யாணம் பண்ணிக்கலயா?”னு கேட்டேன். அதுக்கு அம்மா சொன்னாங்க, “இங்க பாருடா, குமரன். கல்யாணம்ன்ற ஒரு சடங்கினால நமக்கு என்ன கிடைச்சிடும்? சட்டப்படி, சம்பிரதாயப்படி கல்யாணம் பண்ணி எத்தனையோ பேர் பிரிஞ்சிருக்காங்களா, இல்லையா? நமக்கு வேண்டியதெல்லாம் ஒரு உறுதி தானே? ஒரு நிச்சயம் தானே? நம்மையும் நம்ம பிள்ளையையும் இந்த ஆள் ஒருபோதும் கைவிடமாட்டார்ன்ற உறுதி இருந்தா போதாதா? அது எனக்கு ஆழமாக இருந்தது. அந்த அளவுக்கு என் மேல இவர் பிரியம் வச்சிருந்தார். கல்யாணம்ன்ற சடங்கு தேவையற்ற வீண் செலவு மட்டுமில்ல, எல்லாருடைய கவனத்தையும் நம் மீது திருப்பும். ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசுவாங்கன்னு அம்மா சொன்னாங்க.

சுந்தர்: இவருக்கும் வேற கல்யாணம் நடந்து, அதுல ஏதாவது...?

குமரன்: ஆமா. அவருக்கு கல்யாணமாகி முதல் வருஷத்திலேயே மனைவி இறந்துட்டாங்களாம். பிரசவத்தில் தாயும் பிள்ளையும் இறந்துட்டதா அம்மா சொன்னாங்க. அம்மா சொல்வது முழுக்க சரிதான்னு எனக்குத் தோணுது. ஆனா...

சத்யா: என்ன ஆனா?

குமரன்: அந்தப் பாட்டி மாதிரி ஆளுங்க மூலமா இது பரவி நம்ம கிளாஸ்ல இருக்கிற எல்லாருக்கும் தெரிய வந்து, அவனுங்க ஏதாவது இழிவா...

ஆசான்: குமரன், உனக்கு நடந்ததே ஒரு கதை போலத்தான் இருக்கிறது. புதுமைப்பித்தன் என்ற எழுத்தாளரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா?

சத்யா: நிச்சயமா. ஆனா அது அவருடைய இயற்பெயர் இல்ல தானே?

ஆசான்: ஆம். அவருடைய இயற்பெயர் விருத்தாசலம்.

சுந்தர்: விருத்தாசலம்னு ஒரு ஊர் இருக்கு இல்லையா?

ஆசான்: இருக்கிறது. அவரது தந்தை தாசில்தாராகப் பணியாற்றி, அவரது பணியின் நிமித்தம் அவரது குடும்பம் மாற்றலாகி, பல ஊர்களுக்குப் போய் வாழ வேண்டியிருந்தது. இவருக்கு பன்னிரண்டு வயதான போது இவரது தந்தை பணி ஓய்வு பெற்று, சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். எனவே, இவர் வளர்ந்து படித்ததெல்லாம் நெல்லையில் தான். திருமணம் ஆன பிறகு சென்னைக்கு வந்து சில இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றிய போதுதான் கதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதன்பின் திரைப்படத் துறையில் நுழைந்து திரைப்படங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டார். அப்படி ஒரு திரைப்பட வேலைக்காக புனே நகருக்குப் போயிருந்த போது காசநோய்க்கு ஆளாகி, மனைவியின் சொந்த ஊரான திருவனந்தபுரம் திரும்பி, தன் நாற்பத்தியிரண்டாம் வயதில் இறந்தார்.

தமிழ்ச் சிறுகதைகளின் பிதாமகன் என்று கொண்டாடப்படும் புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையின் தலைப்புவாடா மல்லி’.

சுந்தர்: வாடா மல்லி! எவ்வளவு அழகான பெயர்?

ஆசான்: இந்தக் கதையின் நாயகி சரசுவும் பதினேழு வயதான ஒரு விதவை.

சுந்தர்: பதினேழு வயசுல விதவைன்னா அதுக்கு முன்னாடியே கல்யாணம் நடந்திருச்சா? ஐயோ!

சத்யா: அதெல்லாம் அந்தக் காலத்துல சாதாரணம். காந்திக்கும் கஸ்தூரிபாவுக்கும் கல்யாணம் ஆனப்போ அவங்க வயசு என்ன தெரியுமா?

குமரன்: பதிமூன்று.

சுந்தர்: பதிமூன்றா? கடவுளே!

ஆசான்: இந்தக் கதையைச் சொல்லுவது பெயர் இல்லாத ஒரு ஆள். அவன் தான் நாயகன் போலத் தெரியும். ஆனால், இல்லை. தாம்பத்திய வாழ்வின் தொடக்கத்திலேயே கணவனை இழந்த ஓர் இந்து பிராமணப் பெண்ணின் துன்பங்களைப் பற்றிய அவனது சொற்களோடு கதை தொடங்குகிறது. பதினேழு வயது விதவையின்

Comment