No icon

பக்கங்கள் 336, விலை ரூ.300. ISBN 978-81-948397-6-7

‘நம் வாழ்வு’ வெளியீடு – 91 படைப்பு அனைத்தும் உமதே! Laudato Si குழும செபங்கள்

கோவை பாரதியார், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், உயிரி தொழில்நுட்ப அறிஞர் - பூச்சியியல் துறை வல்லுநர் இப்படி பன்முகங்கள் கொண்ட சேசு சபை பணியாளர் அருள்முனைவர் ச. இஞ்ஞாசிமுத்து சே.ச. அவர்கள், இயற்கை மீது கொண்ட பேரன்பிற்கு தன் அழுத்தமான பங்களிப்பாக வடித்துள்ளதே இந்த அருமையான நூல் படைப்பு அனைத்தும் உமதே! திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலகத் திரு அவைக்கு மிகப்பெரிய கொடையாக வழங்கிய திருத்தூது மடலான ‘புகழனைத்தும் உமதே’ என்பதை அடிப்படையாகக் கொண்டு, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று இயற்கை ஆன்மீகத்தை முன்னிறுத்தி, ஒரு சூழலியல் போராளியாக, புனித அசிசியார் வழியில் இயற்கை தாயின் மடியில், அமர்ந்து எழுதிய அற்புதமான படைப்பே படைப்பு அனைத்தும் உமதே!’

சுற்றுச்சூழல் ஆன்மீகத்தைக் கையிலெடுத்து, நாம் மேற்கொள்ளும் திருவழிபாட்டை, வாழ்வாக்க முயற்சித்து, இறைவனின் தெய்வீகப் பிரசன்னத்தை, அவர்தம் ஒவ்வொரு படைப்பிலும் உள்ளூற கண்டு அனுபவித்து, படைப்பின் வழியாக படைத்தவரைப் புகழ்ந்தேத்தும் ஒரு அற்புதமான செபக் கையேடுதான் இந்நூல்.

சூரியன், பிரபஞ்சம், காற்று, தண்ணீர், பாறை, உப்பு, மலர்கள், காடுகள், ஒளி, பறவைகள், தேனீ, மீன்கள் என்று நாற்பது விதமான படைப்புகளை வியந்து, அவற்றைப் போற்றும் வகையில் ஒரு தொடக்கச் செபம், தொடர்புடைய இறைவார்த்தைகள், சிந்தனை, ஐந்துக்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு, இறுதி செபம் என்று தனிநபராகவும் அன்பியமாகவும் துறவறக் குழுமமாகவும் செபிப்பதற்கு உதவும் இந்நூல் ஒரு விசுவாசக் கருவறை என்றால் அது மிகையன்று.

ஒவ்வொரு படைப்பையும் கண்முன் நிறுத்தும் படங்களோடு, 336 பக்கங்களில், தரமான தாள்களில் அச்சிடப்பட்டுள்ள இந்நூலுக்கு பாளை மறைமாவட்ட மேதகு ஆயர் ச. அந்தோனிசாமி அவர்கள் ஆசியுரை வழங்கி பாராட்டியுள்ளார். ISBN 978-81-948397-6-7 என்ற அடையாளத்தோடு நம் வாழ்வின் 91 வது வெளியீடாக வந்துள்ள இந்நூலின் விலை ரூ. 300. அஞ்சல் செலவு இலவசம்.

தனிநபர்களுக்கும், அன்பியங்களுக்கும், துறவற குழுமங்களுக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்! சமயம் கடந்து இயற்கை வழி ஆன்மீகத்திற்கு இந்நூல் ஒரு சிறந்த கையேடு.

வாங்கிப் பயனடைந்திடுங்கள். உங்கள் பிரதிக்கு உடனே முந்துங்கள்.

உரிய ரசீதுடன் இந்நூல் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். நன்றி!

இல்லத்தில் இறையாட்சி - நூலகமே அதற்குச் சாட்சி!

Comment