No icon

ஆலய பழுது பார்த்தல் மற்றும் சீரமைப்பு பணி

கிறிஸ்தவ ஆலயங்களுக்கு  தமிழக அரசின் மானிய உதவி

கிறிஸ்தவ ஆலயங்களை  பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிக்காக தமிழக அரசு 3 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆலய கட்டடத்தின் தன்மை மற்றும் ஆயுளுக்கேற்ப முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு 1 இலட்சம் முதல் 3 இலட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்:

1. மானியம் பெறக்கூடிய ஆலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி வர வேண்டும். ஆலயம் கட்டப்பட்ட இடமும் ஆலயமும் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

2. ஆலயத்தின் சீரமைப்பு பணிக்காக எவ்வித வெளி நாட்டு நிதி உதவியும் பெற்றிருக்க கூடாது. அதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இவ்விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. பிற்சேர்க்கை II &III-80 பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது பிற்படுத்தப்பட்டோர் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட குழு ஆலயங்களை பார்வையிட்டு, அரசால் பரிந்துரை செய்யப்பட்ட தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக மாநில சிறுபான்மையினர் நல இயக்கத்திற்கு அனுப்பி வைத்து நிதி உதவிக்கு பரிந்துரை செய்யும். இந்நிதியானது உறுதி செய்யப்பட்ட பிறகு, இரு தவணைகளாக ஆலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும்.

Comment