No icon

குடந்தை ஞானி

திரு அவையில் இவ்வாண்டில் இடம்பெற உள்ள 3 முக்கிய நிகழ்வுகள்

கோவிட் பெருந்தொற்று இவ்வுலகை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வாண்டில் மூன்று முக்கிய நிகழ்வுகள் உரோம் நகரில் இடம்பெற உள்ளதாக திரு அவை அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜான் ஹென்றி நியூமேன் அவர்களுடன் மேலும் நான்கு பேர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாண்டுகள் 7 மாதங்களுக்குப்பின், இவ்வாண்டு மே மாதம் 15 ஆம் தேதி புனிதர் பட்ட அறிவிப்பு திருப்பலி வத்திக்கானில் இடம்பெற உள்ளது. தமிழகத்தின் முதல் புனிதர் தேவசகாயம் உட்பட 7 பேரின் புனிதர் பட்ட நிகழ்வு மே மாதம் 15 ஆம் தேதி வத்திக்கானில் இடம்பெறும். இந்தியாவின் பொதுநிலையினர் ஒருவர் திரு அவையில் புனிதராக அறிவிக்கப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.

இப்புனிதர் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து ஜூன் மாதம் 22 முதல் 26 வரை, பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு வத்திக்கானில் இடம்பெறும். கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏறத்தாழ 2000 பேர் மட்டுமே இக்கருத்தரங்கில் கலந்துகொள்வர் எனவும், அதே நாட்களில் இணையதளம் வழியாகவும், மறைமாவட்டங்களிலும் கருத்தரங்குகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு திரு அவையில் இடம்பெற உள்ள மூன்றாவது முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 4 ஆம் தேதிபுன்னகையின் திருத்தந்தைஎன அறியப்படும், இறையடியார் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை அருளாளராக அறிவிக்கும் கொண்டாட்டம் வத்திக்கானில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment