No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கிராகோவ் பாப்பிறைப் பல்கலைக்கழகத்திற்கு திருத்தந்தையின் செய்தி

ஜனவரி 11 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று போலந்து கிராகோவ் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை, தன் 625 ஆம் ஆண்டைச் சிறப்பிப்பதையொட்டி, போலந்து நாட்டிற்கு வாழ்த்துச் செய்தியொன்றை  திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
1397 ஆம் ஆண்டு, போலந்து அரசின் விண்ணப்பத்தின் பேரில் திருத்தந்தை ஒன்பதாம் பொனிபாஸ் அவர்கள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கிராகோவ் கல்விக்கழகத்தில் தொடங்கப்பட்ட இறையியல் துறை, மேலும் மேலும் வளர்ந்து, இன்று புனிதத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதை திருத்தந்தை சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.
கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு வெற்றிகளைக் கண்டுவந்த, கிராகோவ் 
இறையியல் துறை, தற்போது, மிகவும் இளையப் பல்கலைக்கழகமான புனிதத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.
"நீங்கள் போய், எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள்" என்ற இயேசுவின் வார்த்தைகளைத்  தனது விருதுவாக்காகக் கொண்டு செயல்படும் இப்பல்கலைக் கழகம், இயேசுவின் நற்செய்தியை மனிதகுலத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வருவது குறித்து திருத்தந்தை தனது பாராட்டையும் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comment