No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்

மெசியாவைக் காணவந்த ஞானிகள் போல் நாமும் ஒன்றிப்பை நோக்கிய பாதையில் திருப்பயணிகள் என திருத்தந்தை பிரான்சிஸ் தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 18 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்ட செய்தியில், ’கிழக்கிலிருந்து மெசியாவை வணங்க பெத்லேகம் நோக்கி வந்த ஞானிகள்போல் கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களின் வேறுபாடுகளில், முழு ஒன்றிப்பைக் காணும் பாதையில் திருப்பயணிகள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபித்து, நம் ஒரே ஆண்டவராம் இயேசுவில் நம் பார்வையை நிலை நிறுத்துவோம்’, என்கிறது திருத்தந்தையின் டிவிட்டர் செய்தி.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திரு அவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம், பல்வேறு தலத் திருஅவைகளிலும், தலைமைப்பீடம் இருக்கும் உரோம் நகரிலும் இடம்பெற்று வருகிறது. இறுதி நாளான ஜனவரி 25 ஆம் தேதி மாலை, உரோம் நகர் புனித பவுல் பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் இச்செபவார நிறைவு வழிபாடு இடம்பெறும்.
 

Comment