No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கட்டுமானப் பணியாளர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை

ஜனவரி 20 ஆம் தேதி, வியாழனன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் கட்டுமானப் பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் தங்கள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டுவிழாவைச் சிறப்பித்த அவர்களை வரவேற்று உரை வழங்கினார். இயேசுவின் நற்செய்திக் காட்டும் சில படிப்பினைகளைக் குறித்து அவர்களோடு பகிர்த்துக்கொள்வதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லூக்கா நற்செய்தியில் வரும் ‘இருவகை அடித்தளங்கள்’ பற்றி எடுத்திக்காட்டிப் பேசினார்.    
மண்மீது வீடு கட்டிய அறிவிலியைப்போல் சோம்பேறியாக இராமல், பாறைமீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளியைப் போன்று அவர்கள் பணிகளில் செய்லபடவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கடவுள்மீது கொள்ளும் நம்பிக்கை என்பது மோசமான ஆபத்துக்களில்ருந்து நம்மைப் பாதுகாப்பது மட்டுமல்ல, மாறாக, நம்மில் நற்செயல்களை உருவாக்கி, நம்மை பலப்படுத்துகிறது என்றும் கூறினார்.
அவர்களின் அன்றாட பணிகளில், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் பொருளாதார தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பது பற்றி பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது நியாயமற்ற போட்டியைத் தவிர்ப்பதை சாத்தியமாக்குகிறது என்றும், சட்டவிரோதம் மற்றும் அநீதியை வளர்க்கக்கூடிய  ஊழலின் ஊக்குவித்தல் வடிவங்களை முறியடிக்கிறது என்றும் தெரிவித்தார்.  
பொறுப்பு, நிலைத்தன்மை, சுரண்டல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்தெல்லாம் தான் எழுதிய ‘இறைவா உமக்கே புகழ்’ திருத்தூது மடலிலிருந்து எடுத்துகாட்டிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கட்டிடங்களை வடிவமைப்பதில் மட்டும் அழகை தேடாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், ஒருவரையொருவர் சந்தித்து உதவுதிலும், சுற்றுச்சூழலுடன் இணக்கம் காண்பதிலும்  அழகைத் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.    
இறுதியாக, நெறிமுறைகள், சட்டம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விழுமியங்களை விளக்கிக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள்தான் உயர்ந்த செல்வம், அவர்கள் இல்லாமல் எந்தவொரு வேலையும் இல்லை, வியாபாரம் இல்லை, பொருளாதாரம் இல்லை என்பதை உணர்ந்து, பணியின் கண்ணியத்தையும் உறுதியையும் அழகையும் காத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
கட்டுமானத் துறையில் செயல்படும் அனைத்து அளவிலான இத்தாலிய நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழில்முனைவோர் சங்கமாக 1946 ஆம் ஆண்டில் கட்டிட ஒப்பந்ததாரர்களின் தேசிய சங்கம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது    
 

Comment