No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்

ஜனவரி 2 ஆம் தேதி, ஞாயிறன்று உடனடி பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களைப் பெற்ற ஏர்இத்தாலி ஊழியர்களின் விடயத்தில் தான் சாதகமான முடிவை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு தொழிலாளர்கள் குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.
நல்லதொரு பதிலுக்காகக் காத்திருக்கும் வேளையில், அனைவரின், குறிப்பாக குடும்பங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொழிலாளர்களின் பணிச் சூழ்நிலைக்கு ஏற்ப நேர்மறையான தீர்வு காணவேண்டும் என்று அழைப்புவிடுத்த திருத்தந்தை, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம் என்று மேலும் கூறினார்.
கடந்த புதன் மறைக்கல்வி உரையின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணி என்ற கருப்பொருளிலும், வேலை இல்லாதவர்களின் சோகம் குறித்தும், அதேபோல், கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள், சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள், உழைத்து இறப்பவர்கள், வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால் தங்கள் குழந்தைப் பருவத்தை வாழ முடியாதவர்கள் ஆகியோர் குறித்தும் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Comment