No icon

இந்தியச் சூழலில்‘மனித மாண்பு’ கோட்பாடு

மனித மாண்புகுறித்த திரு அவைக் கோட்பாடானது விசுவாசக் கோட்பாட்டுத் துறையால் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. “மனித மாண்பைக் குறித்து விளக்கும் இந்த விசுவாசக் கோட்பாடு, இந்தியாவில் பலர் மனித மாண்பிழந்த நிலையில் வாழ்வதற்குக் காரணமாக இருக்கும் சமூக, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த சிந்தனை முறைகளை எதிர்கொள்ள நமக்குச் சவால் விடுக்கிறது. செல்வந்தர்களுக்கும், அடிப்படை வசதி இல்லாதவர்களுக்குமிடையே அதிகரித்து வரும் இடைவெளி, வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்பவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைக் குறித்து உரையாட நமக்கும், குறிப்பாக நம் இந்தியத் திரு அவைக்கும் மிகப்பெரிய சவாலை முன்வைக்கிறது. வறுமை, அநீதி மற்றும் வன்முறைக்கான காரணங்களைப் பற்றி விவாதிக்கவும், நமது சூழலில் நற்செய்தி விழுமியங்களின் கண்ணோட்டத்தில் மக்களின் மாண்பை நிலைநிறுத்தும் வழிகளைக் கண்டறியவும் இக்கோட்பாடு இந்தியத் திரு அவைக்கு அழைப்பு விடுக்கிறதுஎன்று கர்தினால் அந்தோனி பூலா கருத்துத் தெரிவித்துள்ளார்.

Comment