No icon

இளமைப் பருவம் துய்த்து மகிழும் பருவம்

“ஒளியை அணையாமல் காத்துக்கொள்”

நற்செய்தியின் மதிப்பீடுகளை வாழ்வாக்க முயற்சிக்கும் திருக்குடும்பத் தம்பதியினரான பேராசிரியர்கள் பிலிப் மற்றும் இம்மாக்குலேட், தங்களுக்கே உரித்தான முறையில் திருவிவிலிய மேற்கோள்களையும் திரு அவையின் போதனைகளையும் நல்லொழுக்க மதிப்பீடுகளையும் அறநெறிச் சிந்தனைகளையும் கிறித்தவ மணம் மாறாமல் ஒருசேர குழைத்து, அமுதமாக படைத்த, இளைஞர்களுக்கான எழு! ஒளி வீசு!என்று இந்த நெடுந்தொடர் முடிவுக்கு வருகிறதுஇதனை அர்ப்பண உணர்வுடன் கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் தொய்வின்றி செய்து, தமிழக இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர்களுக்குநம் வாழ்வுமனமார்ந்த நன்றியை கரம்கூப்பி தெரிவிக்கிறது. அவர்கள் ஏற்றி வைத்த தீபம் நம் மனங்களில் ஒளிர்ந்து நம் அனைவரையும் உலகிற்கு ஒளியாக ஒளிரச் செய்யட்டும்! -குடந்தை ஞானி, ஆசிரியர்

எழு! ஒளிவீசு!!

இளையோரே! இளமைப்பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள் (சஉ11:9).

இளமைப் பருவம் துய்த்து மகிழும் பருவம். துள்ளி விளையாடித்திரியும் பருவம். ஆனால், அதே வேளையிலே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பருவம். இளமையில் கற்கும் கல்வி, எடுக்கும் தீர்மானம் யாவும் எதிர்காலத்துக்கு வித்திடுகின்றன. இளமைப்பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்காகவே என்றாலும், எதிலே நாம் மகிழ்ச்சி காண்கிறோம் என்றதன் அடிப்படையில் தான் எதிர்காலம் அமையும்.

ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்” (திபா 37:4) என்கிறது விவிலியம். இயேசு இவ்வுலகிற்கு வந்ததைவாக்கு மனுவுருவானார்என யோவா 1:14 கூறுகிறது. எனவே, இன்றைய காலக்கட்டத்தில் கடவுளின் வாக்கு என்பது, இயேசுவுக்கு இன்னொரு பெயராக உள்ளது. ஆகவே, ஆண்டவர் என்பது இறைவார்த்தையைக் குறிக்கிறது (திவெ 19:13). எனவே, ஆண்டவரில் அதாவது அவரது வார்த்தையில் மகிழ்ச்சி கொள்ளும் போது, அவர் நமது உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றுவார். ஆனால், உலகப் பொருட்களில் இன்பம் தேடும்போது, அதற்குரிய பலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். விவிலிய மேற்கோளில் (சஉ 11:9) கூறியிருப்பது போன்று, அதற்குரிய தீர்ப்பை கடவுள் வழங்குவார். அதனால்தான் இளையோரைப்பார்த்துமனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக்கக்கூடியவையே” (சஉ 11:10) எனக் கூறுகிறது. இளமைக் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்தால் குடும்பம் என்று ஒன்று வந்த பிறகு, வாழ்நாள் எல்லாம் நாம் வருந்த வேண்டியிருக்கும். கோடை காலத்தில் குதித்து கும்மாளமடித்த வெட்டுக்கிளி, குளிர் காலத்தில் எறும்பிடம் போய் கையேந்தியது பற்றி நாம் படிக்கும்எறும்பும் வெட்டுக்கிளியும்கதை நம் வாழ்வில் நிஜமாகலாம்.

எனவே, நேரத்தை இளமை காலத்தில் சரியாக பயன்படுத்தி, வாலிப நாள்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, இறைவார்த்தை ஒளியில் அவற்றிற்கு தீர்வு கண்டு, இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள். சுருங்கச் சொன்னால் இறைவார்த்தையை வாசித்து, தியானித்தால் நீங்கள் செல்லுமிடமெல்லாம் நலம்பெறுவீர்கள், வெற்றி காண்பீர்கள் (யோசு 1:7). “உம்முடைய தொடக்கம் எளிமையாக இருப்பினும், உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்” (யோபு 8:7) என நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டுள்ளது.

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை” (திபா 71:5) சிந்தனையை மாற்றுவதன் மூலம், வாழ்வை மாற்ற முடியும் என்ற படிப்பினையையே ஆதாரமாகக் கொண்டு, மாற்றத்திற்கான வழியைக் கற்றுக்கொள்ள முயன்றுள்ளோம். அதனையே கற்றுக் கொடுக்கவும், எடுத்த முயற்சி நிச்சயமாக நம்பிக்கையை பதிவு செய்திருக்கிறது. மாற்றம் தந்திருக்கிறது.

எப்படி எதிர்மறையான நிகழ்வுகள், எண்ணங்கள், தகவல்கள், யதார்த்தமானவை என்றாலும் சுருண்டு போய்விட வேண்டியது இல்லை. ஒரு எதிர்மறை அடையாளத்தோடு(-ve sign) இன்னொன்றை 900 திசை திருப்பி, 1 என்று மாற்றி அதனுடன் சேர்க்கும்போது, +ve Sign

ஆக மாறிவிடும். எல்லாமே எண்ணத்தின் ஊற்றிலிருந்துதான் புறப்படுகிறது. இளைஞரோடு கற்றுக்கொண்டதிலிருந்து பயம் விரட்டும் போதுநான் ஏன் பயப்பட வேண்டும்?” என்று, பயத்தை எதிர்த்தால் அது அங்கே இருக்காது. உறக்கம் வராமல் தவிக்கும்போது, "நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்; உன் கால் ஒருபோதும் இடறாது. நீ படுக்கப்போகும்போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய் (நீமொ 3: 23-24) என்ற படிப்பினை அச்சத்தை விரட்டிவிடவும், அயர்ந்து தூங்கவும் கற்றுக்கொடுத்தது.

எலும்பு தேய்வு மஜ்ஜை கிழித்துவிட்டது என்றெல்லாம் அச்சுறுத்தும் சூழலிலும்உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்; உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்” (எசா 66:14) எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது” (எபி 4:12) என்பன போன்ற புதிய படிப்பினைகள் எலும்பில் மாற்றம் கொண்டுவந்து எளிதாக நடக்க முடிகிறது என்பது என் வாழ்வின் சாட்சியம்.

இளைஞருக்குக் கற்றுக்கொடுத்தோம் என்பதைவிட, இளைஞரோடு கற்றுக்கொண்டோம் என்பது உண்மை.

பெற்றோரின் சுமையைக் குறைக்க வழி தேடிய போது, கிடைத்த ஆலோசனைகள் நல்ல பெற்றோராக மாற உதவின. “என் பிள்ளைகள்என்று சொல்லுவதை மாற்றிகடவுள் எங்களுக்கு அளித்த பிள்ளைகள்என்று சொல்லி சிந்திக்கும்போது, பொறுப்பு முழுவதும் வழி நடத்தும் வல்ல இறைவனையே சார்ந்து நிற்பது புரிந்தது (எசா 8:18, எபி 2:13) கற்றுக்கொடுக்க இறைவனைக் கேட்டபோது ஆண்டவர் தாமே கற்றுக்கொடுப்பதும், நிறைவாழ்வு நோக்கி சிறப்புறச் செய்ததும் புரிந்தது (எசா 54:13, யோவா 6:45). எந்த எதிர்மறை பண்பையும் மகிழ்நோக்கு சிந்தனையாக மாற்ற முடியும் என்பது தெளிவானது. பயம் மறைய; விடியல் உதயமாவதைக் காணமுடிந்தது.

வாழ்நாள் முழுவதும் கடந்த காலத்திற்காக மனம் வருந்துவதிலும், கையில் வந்து சேராதநாளைக்காகவும்வாழ்ந்தே வாழ்வை வீணாக்கி விட வேண்டாம் என்ற எச்சரிக்கை புரிந்திருக்கிறது. இடறி விழுந்தாலும் எழுந்து நடக்க துணிவைக் கற்றுத் தந்தது. இளையோரின் பிரச்சனைகளைப் பேசுவது இருட்டை விரட்ட முயல்வது; மாறாக, ஒளி ஏற்றினால் இருள் தானாகவே மறையும் என்ற உண்மை இளைஞர்களைஎழு! ஒளி வீசு!” என்று சவால் விட்டு அழைத்த அழைப்பு கற்றுத் தந்தது.

அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” (மத் 6:34). நேற்று கடந்து விட்ட ஒன்று, நாளை என்பது கைக்கு வந்து சேரும்போது, “இன்றுஎன்றுதான் வந்து சேர்கிறது. அப்படியே அந்தந்த நாளைய சுமையே பெரிதாக இருந்தாலும்என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் எனும் சுமைதாங்கி தெரிந்த பிறகு (மத் 11:28-30) வசனத்தை சொல்லி, அன்றைய பாரத்தை அன்றே இறக்கத் தெரிந்துள்ளது.

வாழ்வின் பெரும்பாலான வாழ்விலே ஓட்ட ஓட்டமாக ஓடி, காலதாமதமானது என்று (டுயவந சுநபளைவநச) பதிவு செய்ததை நினைத்து வருந்தும் அளவு புதிய படிப்பினைகளை இந்த இளைஞர் உலகம் கற்று தந்தது. “நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை; தப்பியோடுவது போல் செல்வதுமில்லை; ஏனெனில், ஆண்டவர் உங்கள் முன்னே செல்வார்; இஸ்ரயேலின் கடவுள் உங்கள் பின்னே பாதுகாப்பாய் இருப்பார்” (எசா 52:12) என்ற, படிப்பினை நேரம் தவறாமைக்குத் துணை நிற்கிறது.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிந்தனையை வாழ்வாக்கியதைப் பகிர்ந்துகொண்ட சான்றோரும், கற்றுத் தந்தனர். ஆறுதல் பெற்றதைச் சொன்னார்கள். “என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது .

என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்” (திபா 31:15) என்று, சமர்ப்பண வார்த்தை எப்போதும் பாதுகாப்பையும், நிறைவையும் தரும் என்ற உறுதிப்பாட்டைத் தந்துள்ளது. நம்பிக்கையில் தொடருவோம் நிறைவு பெறுவோம்.

நம்பிக்கை தொடர்ந்து ஒளி வீசட்டும்!

                                                                நிறைவுற்றது

 

Comment