No icon

நவம்பர் 25

அலெக்ஸாந்திரியா நகர் புனித கேத்தரீன்

புனித கேத்தரின் 282 ஆம் ஆண்டு பிறந்தார். தனது கன்னிமைக்கு கலங்கம் ஏற்படாமல் தூயவராக வாழ்ந்தார். திருமண ஏற்பாடு செய்த பெற்றோரிடம், அரசராகிய இயேசு கிறிஸ்துவை நான் திருமணம் செய்துகொள்வேன் என்றார். தன் வாழ்வை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தபோது, உரோமை பேரரசர் மாக்செந்தியுஸ் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி, கிறிஸ்துவை மறுதலிக்க கூறினான். கேத்தரீன் அரசனுக்கு எதிராக குரல் கொடுத்தார். அரசன், கேத்தரீன் துணிவைப் பார்த்து வியந்து, தத்துவ ஞானிகளை அழைத்து தான் வழிபடுகின்ற கடவுளே உண்மை கடவுள் என்றார். கேத்தரீன் ஞானிகளைக் கண்டு பயப்படாமல், கிறிஸ்துவே உண்மை கடவுள் என்றுகூறிய போது, ஞானிகளில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். அரசர் கோபம் கொண்டு, கேத்தரீனை சித்தரவதை செய்து, 305 ஆம் ஆண்டு சக்கரத்தின் அடியில் இட்டு கொலை செய்தான்.

Comment