No icon

டிசம்பர் 08

தூய அமல அன்னை

பேறுபெற்ற கன்னி மரியா கருவான முதல் நொடியிலிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும், விடுவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). அலகையை அழிக்கும் அவளது வித்து என்பது, இயேசு கிறிஸ்துவே. அந்த தாய் அன்னை மரியா. மரியா பாம்பின் தலையை நசுக்கி, அழிக்க முன் குறிக்கப்பட்டவர். 1858 ஆம் ஆண்டு, மார்ச் 25 ஆம் நாள், லூர்து நகர் கெபியில் காட்சி கொடுத்த அன்னை, “நாமே அமல உற்பவம்என்று, புனித பெர்னதெத் வழி உலகிற்கு அறிவித்தார். மரியா முற்றிலும் புனிதமானவர், பாவக்கறை ஏதுமில்லாதவர். கருவான முதல் நொடியிலிருந்து தனிச் சிறப்பான, புனிதத்தின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்தார். (திருச்சபை.எண். 56).

Comment