No icon

பச்சாரா பூட்ரோஸ் அல்-ரஹி

லெபனோனில் முதலீடு செய்ய இங்கிலாந்து மக்களிடம் வேண்டுகோள்

லெபனோன் மீதான சிறப்புக் கவனம் செலுத்தும் விதத்தில் அனைத்துலக மாநாட்டிற்கு அழைப்பு விடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை தான் கேட்டுக்கொள்வதாக அந்தியோக்கியாவின் மாரோனிய முதுபெரும்தந்தை பச்சாரா பூட்ரோஸ் அல்-ரஹி கூறியுள்ளார்.

ஜனவரி 10, செவ்வாயன்று, பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட பயணத்தில் அதன் வெஸ்ட்மின்ஸ்டர்-இல் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறியுள்ள முதுபெரும்தந்தை அல்-ரஹி அவர்கள், கடந்த காலத்தில் லெபனோன் பேராசைக்கு ஆளாகியிருந்தது மற்றும் "போர்கள், பகைமைகள், ஆக்கிரமிப்பு, படுகொலைகள் மற்றும் அநீதிகளுக்கான இடமாக இருந்தது என்ற தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

மேலும் லெபனோனைப் பாதுகாக்கவும் அதனை, நிலையானதாகவும், ஒன்றிணைந்ததாகவும் வைத்திருக்க வேண்டுமானால் அது உள்நாட்டு மற்றும் அனைத்துலக மோதல்களில் இருந்து காப்பாற்றப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் முதுபெரும்தந்தை அல்-ரஹி வலியுறுத்திக் கூறியுள்ள்ளார்.

2012-ஆம் ஆண்டு லெபனோன் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களைக் குறித்த சில சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்ட முதுபெரும்தந்தை அல்-ரஹி அவர்கள்லெபனோன் நாட்டின்மீது அவர் கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள மக்களை லெபனோனில் முதலீடு செய்யவும், அந்நாட்டிற்கு ஆதரவாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், பாலஸ்தீனத்தில் இரு நாட்டு தீர்வை ஆதரிக்கவும் கேட்டுக் கொண்ட முதுபெரும்தந்தை  அல்-ரஹி அவர்கள், உலகம் முழுவதும் இருக்கும் மாரோனியர்கள் லெபனோனின் பிரச்சனைக்கான காரணத்தை அவர்களுடன் சுமந்து செல்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். (ICN)

Comment