No icon

ரெபிபியா சிறையில் திருத்தந்தையின் புனித வியாழன் திருப்பலி!

புனித வியாழனன்று இயேசு இறுதி இரவு உணவின்போது தமது சீடர்களின் பாதங்களைக் கழுவியதுபோல, அருள்பணியாளர், இறை மக்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒவ்வொரு புனித வியாழனன்றும்  சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்கிருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளின் பாதங்களைக் கழுவுவது வழக்கம்.

கடந்த 2023-ஆம் ஆண்டு உரோமை சிறார் சிறைக்குச் சென்றார். இந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி புனித வியாழனன்று உரோமையிலுள்ள ரெபிபியா பெண்கள் சிறையில் மாலை 4.00 மணிக்குத் திருப்பலியைத் தலைமையேற்று வழி நடத்தவிருக்கிறார். அதன் பிறகு அங்கிருக்கும் பெண் கைதிகள் மற்றும் சிறை வளாகப் பணியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு புனித வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் இந்த ரெபிபியா சிறையில் திருப்பலி கொண்டாடினார். அப்போது இறைமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டுக் கொண்டாட்டம் தனிப்பட்டதாக இருக்கும் என்றும், பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

Comment