No icon

குடந்தை ஞானி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடி

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜாபுவா மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கரான பேட்ரிக் கனவா, “கிறிஸ்தவத்தை கைவிட்டு இந்து மதத்தில் சேர இந்து மதவாதிகள் எங்களை கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்துத்துவ அடிப்படைவாதிகள் மற்றும் அமைப்புகள் கிராமங்களில் சிறப்பு இயக்கங்களை நடத்தி வருவது கவலையளிக்கிறது. ஜாபுவா மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது, ஆனால், என்ன வந்தாலும் நாங்கள் இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை கைவிட மாட்டோம். மதமாற்றம் செய்ததாகக் கூறி, நவம்பர் 10ஆம் தேதி, ஆறு மத போதகர்கள் உட்பட 10 கிறிஸ்தவர்களை காவல் துறையினர் கைது செய்தது மட்டுமில்லாமல்  கிறிஸ்தவர்களுக்கு  எதிரான போக்கு அதிகரித்து வருகிறது" என்று நவம்பர் 16 அன்று ருஊஹ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஜாபுவா கத்தோலிக்க மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு பொறுப்பாளர் அருள்பணியாளர் ராக்கி ஷா, "கிறிஸ்தவ மதத்திற்கு மக்களை மாற்றுவதற்காக மட்டுமே செயல்படுபவர்களாக நாங்கள் சித்தரிக்கப்படுவது வருத்தமளிக்கின்றது. இங்கு அதிகமாக வாழும் இடத்தில் ஒரு கிறிஸ்தவராக வாழ்வது என்பது கடினமான ஒன்று. விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற சில இந்து அமைப்புகள் கிறிஸ்தவர்களை எதிரிகளாகக் கருதுகின்றன" என்று கூறினார்.

1,000க்கும் மேற்பட்ட இந்துத்துவ அடிப்படைவாதிளை கொண்ட கும்பல் ஒன்று மறைமாவட்டத்தில் உள்ள தண்டலாவில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அன்னை மரியாவின் ஆலயம் மதமாற்ற நடவடிக்கைகளுக்கான இடமாக விளங்குவதாகக் கூறி, இடிக்க முயன்றது மிகவும் வேதனையளிக்கின்றது. காவல்துறையினர் சரியான நேரத்தில் தலையிட்டதால் அதைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால், அந்த கும்பல், ஆலயத்தை இடித்துத் தள்ள வேண்டும் என்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில், ஜாபுவா மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆலயங்களை இடிப்பதாக அச்சுறுத்தினர். காவல்துறையினரின் உதவியால் இன்றுவரை காப்பாற்றி வருகிறோம். ஆனால், நாளை என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று அருள்பணியாளர் ராக்கி ஷா கூறினார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 7.1 கோடி  மக்களில், கிறிஸ்தவர்கள் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் கிறிஸ்தவர்களை பிற மக்களுக்கு தவறாக காட்டி விரோதத்தை உண்டாக்கி வருகின்றனர்.

Comment