No icon

ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த உலக அறிக்கையின் பின்னணியில்

சிகப்பு எச்சரிக்கை IPCC-2

இப்புவியை அழிப்போரை அழிக்க நேரம் வந்துவிட்டது (திவெ 11:18)

மனிதநேயம் இன்றைய கால கட்டத்தில் இருக்கும் அவலநிலையை இறைவாக்கினர் எரேமியா அப்போதே சுட்டிக்காட்டுகிறார். “கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்!” (எரே 5:21).

இப்புவியில் வாழும் 800 கோடி மக்களும் குருடர்களாக மாறிய நிலையில் நமது கண்ணுக்கு முன்னால், பின்னால், மேலே, கீழே, வலது, இடது புறம் நடக்கின்ற நிகழ்வுகளை பார்க்க தவறிவிட்டோம். “இறைவா உமக்கே புகழ் (Laudato Si) திருமடலின் முதலாவது அத்தியாயத்தின் தலைப்பை “நமது பொது வீடாகிய புவி என்னும் நமது வீட்டிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது” எனும் வார்த்தைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் உபயோகித்து, ஒட்டுமொத்த 800 கோடி மக்களையும் கண்களை திறந்து இந்த புவியை பார்க்கச்சொல்லி அழைப்பு விடுக்கிறார். “1600 கோடி கண்கள் இப்புவியை நோட்டமிடும் அவசியமும், அவசரமும் வந்துவிட்டது என தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC)  அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது.

நமது வீடாகிய இப்புவியை பார்ப்போமா?

“கண்ணிருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களே” (மாற் 8:18) என இயேசுவும் நமக்கு நினைவுபடுத்துகிறார்.

இப்புவி என்பது இரு கூறுகளால் அமைக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு:

உயிரற்றவை (Abiotic - Non living)

உயிருள்ளவை (Biotic - Living)

முதலில் உயிரற்றவை (Biotic - Living) எனப்படும் பஞ்சபூதங்களை அகல கண் திறந்து பார்ப்போம். உங்கள் காலுக்கடியில் உள்ள மண்ணைப் பாருங்கள் எவ்வளவு விஷத்தை கொட்டி இந்த மண்ணை சாகடித்துவிட்டோம் என்பது நமது கண்களுக்கு தெளிவாக புலப்படும். மரங்களை வெட்டியதால் மண் அரிப்பு ஏற்பட்டு, விளைமண் நாசமாகிப் போனதை நமது கண்கள் நமக்கு நினைவூட்டும். விளைமண்ணை செங்கல் செய்து நாம் வீட்டை கட்டியது, பெருங்கோயில்கள் கட்டியது, தொழிற்சாலைகள் கட்டியது போன்றவை நமது கண்ணுக்கு புலப்படும்.

பார்! நன்றாகப் பார்! “நீ மண்ணால் செய்யப்பட்டவன்” (தொநூ 2:7) என்பதை பார்க்கவே தவறிவிட்டாயே! உன்னுள் இருக்கும் ஒவ்வொரு மரபணுவும், பண்பதுவும் அதே மண்ணால் செய்யப்பட்டவையே என்பதை மறந்துவிட்டாயே! இதே கருத்தோட்டத்தை திருத்தந்தை பிரான்சிஸ் இறைவா உமக்கே புகழ் (Laudato Si) திருமடலில் காணும் 2ஆம் பத்தியில் எழுதி நம்மை அதிர வைக்கிறார்.

“மனித இனம் பாவமாகிய கோபம், வன்முறை, பொறாமை, தன்னலம் போன்ற இவைகளால் உந்தப்பட்டு அவனால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகச் செயல்பாடுகளை அழிக்கப்பட்ட மண்ணில் பார்க்கலாம். இதனால் பூமி அழுது கொண்டிருக்கிறது! புறக்கணிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட நிலைகளில் பூமியும் ஒன்று. இதனால் பூமி பேறுகால வேதனையில் இருக்கிறது (உரோ 8:22).

மனிதர்களாகிய நாம் அனைவரும் மண்ணால் செய்யப்பட்டவர்கள் என்பதை மறந்துவிட்டோம் (தொநூ 2;7). நமது உடலானது பூமியின் மூலக்கூறுகளான நிலம், நீர், காற்று இவைகளால் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றை அழிப்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமம்” (Laudato Si -2)

“திருமந்திரம்” எனும் நூலை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நமக்கு எழுதித்தந்த திருமூலரும் இதே கருத்தை தனது சூத்திரத்தில் வலியுறுத்துகிறார்.

“அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை

பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை”

அண்டம் என்றால் உலகம். பிண்டம் என்றால் உடல்.

இந்த இரண்டையும் ஏறெடுத்து பாருங்கள்!

அண்டத்தில் 70ரூ நீராக இருக்கிறது!

பிண்டத்திலும் 70ரூ நீராக இருக்கிறது!

அண்டத்தில் நீரில் 3.5ரூ உப்பு இருக்கிறது!

பிண்டத்திலும் 3.5ரூ உப்பு இருக்கிறது!

அண்டத்தில் 23ரூ மண்ணாக இருக்கிறது!

பிண்டத்திலும் 23ரூ எலும்புகளாக (carbon)  இருக்கிறது!

அண்டத்தில் 7ரூ நெருப்பு, வாயு, ஆகாயமாக இருக்கிறது!

பிண்டத்திலும் 7ரூ நெருப்பு, வாயு, ஆகாயமாக இருக்கிறது !

“அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை!

பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை!”

அண்டத்தில் பாலைவனம், வயல்கள், மலைகள், கடல்கள், காடுகள் போன்ற சூழல் அமைப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இதையே! தொல்காப்பியர் அன்று “திணைகள்” என்று வகுத்து தந்திருக்கிறார்.

1. மலையும், மலைகளைச் சார்ந்த இடமும் (குறிஞ்சி)

2. காடும் காட்டைச் சார்ந்த இடமும் (முல்லை)

3. கடலும் கடலைச் சார்ந்த இடமும் (நெய்தல்)

4. வயலும் வயலைச்சார்ந்த இடமும் (மருதம்)

5. மண்ணும் மண்ணைச்சார்ந்த இடமும் (பாலை)

மேற்சொல்லப்பட்ட அட்டவணையை மீண்டும் ஒருமுறை கவனமாகப் பாருங்கள் உதாரணம்:

மலையும், மலையைச் சார்ந்த இடமும் (குறிஞ்சி)

 மணல் என்பது சூழல் (Ecology)

மலையைச்சார்ந்த இடம் என்பது சூழல் அமைப்பு (Environment)  அல்லது மலை என்பதை (Biotic Living)  உயிருள்ளவையாக பார்க்க வேண்டும்.

மலையைச் சார்ந்த இடம் என்பதை (Abiotic- Non living) உயிரற்றவையாக பார்க்க வேண்டும்.

 இதுகாறும் நான் எழுதிய அண்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நமது பிண்டத்தில் அல்லது நமது உடம்பிலே பார்க்கலாம். நமது உடம்பில் அண்டத்தில் நாம் பார்த்த எல்லா சூழல் அமைப்புகளும் பொதிந்து கிடக்கின்றன.

* முதுகு - பாலைவனம் (பாலை)

* கால்கள், கைகள் - நதிகள், கடல்கள் (நெய்தல்)

* வயிறு, பின்புறம் - மலைகள், குன்றுகள் (குறிஞ்சி)

* உடல் பாகங்களில் காணப்படும் முடி - வயல், குறுங்காடு (மருதம்)

* தலையில் உள்ள முடி, கூந்தல் - காடுகள் (முல்லை)

“அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை

பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை”

மேலும், அண்டத்தில் எரிமலைகள், நிலநடுக்கம், கண்டத்தட்டு தகடுகள், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களை நாம் கண்திறந்து பார்த்திருக்கிறோம். மீண்டும் ஒரு முறை பார்!

பிண்டத்திலும் அல்லது நமது உடம்பிலும் எரிமலைகள், பூகம்பங்கள், சுனாமிகள் போன்றவை நிறைந்து உள்ளதை கண்திறந்து பாருங்கள்.

எரிமலைகள் என்பது - மோகம், கோபம், பேராசை

பூகம்பம் என்பது - சோகம், வேதனை, நோய்கள்

சுனாமி என்பது - சண்டைகள், கலகங்கள், வெறுப்பு

“அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை

பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை”

அண்டத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை நாம் பார்க்காததை இயேசுநாதர் சுட்டிக்காட்டி நமக்கு பாடம் புகட்டுகின்ற நிகழ்வு லூக்கா நற்செய்தி 12 ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டுள்ளதை பார்க்குமாறு உலகத்திற்கு அழைப்புவிடுக்கிறேன். இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழைவரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது  மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது. வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும், வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?” (லூக் 12:54-57).

தட்பவெப்பநிலை மாறுதலுக்கான அரசிடைக்குழு (IPCC) 6ஆம் மதிப்பீட்டு அறிக்கையில் (AR6) என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்!

 1988 தொடங்கி 2013 - 2014 வரை மொத்தம் 5 மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியாகி உள்ளன. ஆறாவது ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையினை 3 பாகங்களாக வெளியிடப்படும். அவை 3 பணிக்குழு என்று அழைப்பார்கள். ஆகஸ்ட் 7, 2021 இல் பணிக்குழு 1 (சூழு1) அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் இந்த அறிக்கையை “மனித இனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரு சிகப்பு எச்சரிக்கை” என்று உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பணிக்குழு 1 (NG1) வெளியிட்டிருக்கும் அறிக்கையின் பெயர் “ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பருவநிலை மாற்றம்” (The Physical Basic of Climate Change) 2022 ஆம் வருடம் பிப்ரவரியில் பணிக்குழு 2 (NG2) அறிக்கை வெளியிடப்படும் உலகையே அலறவைக்கும் செய்திகள் இந்த அறிக்கையில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து பணிக்குழு 3 (NG3) அறிக்கை மார்ச் அல்லது ஏப்ரல் 2022 இல் வெளியிடப்படும். இதில் நாடுகளும், மக்களும் என்ன செய்ய வேண்டும் எனும் செய்திகள் வெளியிடப்படும்.

தட்பவெப்ப நிலை பருவ மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC)  2013 - 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பணிக்குழு 1,2,3 அறிக்கைகள் நமக்கு ஏற்கனவே சொல்லியிருந்த விஷயங்களை மேலும் ஆழமாக, அபாயகரமாக விளக்கப்போவதுதான் 2022 இல் வெளிவரும் பணிக்குழு 1,2 அறிக்கைகள் இருக்கும்.

பணிக்குழு 1 NG1 வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்னும் 20 வருட காலத்தில் பூமியின் மேற்பரப்பில் 1.5 முதல் 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏறக்கூடும். கடல் மட்டம் 1அடி உயரக்கூடும். இது வேறு எங்கேயோ நடக்கக்கூடியவை அல்ல! நமது பாரத நாட்டில் நமது சென்னையில் நடக்க போகும் நிகழ்வுகள்.

கண்களை திறந்து பாருங்கள்! - பூமியை அகலத் திறந்து பாருங்கள் -  IPCC சிவப்பு எச்சரிக்கை அறிக்கையை.

(தொடரும்)  

Comment