No icon

காரித்தாஸ் உரிமத்தை இரத்து செய்ய கோரிக்கை!

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) அதிகாரப் பூர்வத் தொண்டு நிறுவனமானகாரித்தாஸ் இந்தியாமதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி அதன் உரிமத்தை, அதாவது FCRA எனப்படும் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டப்  பதிவை  இரத்து செய்ய வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது. ஆனால், ‘இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. காரித்தாஸ் இந்தியா எந்தவொரு மதமாற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. இது அனைத்து மக்களுக்கும் சேவை செய்கிறது. இவ்வமைப்பு ஆயிரக்கணக்கான கிராமங்களில், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு உதவி வருகிறதுஎன்று இந்தப் புகார் குறித்து இந்திய காரித்தாஸ் அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சகோ. பிரடெரிக் டிசோசா அவர்கள்  கூறியுள்ளார்.

Comment